Search This Blog

Saturday, 3 March 2018

இலஞ்சத்தை ஒழிக்க வேண்டுமா? உன் கடமையை செய், பொறுமையாக இரு.

பொறுமையாக இருந்தால் எப்படி ஊழலை ஒழிக்க முடியும்?  என்ற கேள்வி தங்களுக்கு எழலாம். அது சாத்தியமே.. நீங்கள் பொறுமையாக இருக்கவேண்டும் ஆனால் உங்கள் கடமைகளை செய்துவிட்டு. எடுத்துகாட்டாக உங்களுக்கு பட்டா தேவை என்று வைத்துகொள்வோம். அதனைப் பெற நீங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன? முறையாக அரசு அலுவலகத்தில் சட்டப்படியான வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பம் அளிக்க வேண்டும். குறித்துரைத்த காலகட்டத்திற்குள் பட்டா வழங்கப்படவில்லை என்றால் அதற்கான காரணத்தை அறிந்துகொள்ள வேண்டும். அதற்கான காரணம் இலஞ்சம் என்றால் இலஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதுதான் தங்களின் முதல் கடமை. பட்டாவை சட்டப்படி பெற சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு கடிதம் மூலம் “அனைத்து தகுதியும் இருந்த பிறகும் இவ்வளவு நாட்கள் ஆனபிறகும் பட்டா வழங்கப்படவில்லை. எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் ......... பட்டா வழங்க வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டு கடிதம் அனுப்பிவிடுங்கள். அதன் பிறகும் தங்களுக்கு பட்டா வழங்கப்படவில்லை என்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதற்கான காரணங்கள் அடங்கிய கோப்பின் நகல்களை வழங்கக் கோரி அத்துறையின் பொது தகவல் அலுவலருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பிவிடுங்கள். இதுதான் தங்களின் இரண்டாவது கடமை. 
ஆக இவ்விரண்டு கடமைகளையும்  செய்ய தாங்கள் பொறுமையாக இருக்க வேண்ட்டும். ஒவ்வொருவரும் இக்கடமையை செய்யும் வரை பொறுமையாக இருந்துவிட்டால் பட்டா மற்றும் இல்லை அனைத்து அரசு சான்றிதழ்களையும் இலஞ்சம் இல்லாமல் வாங்கிவிடலாம். 
இதெல்லாம் செய்யும் அளவிற்கு தங்களுக்கு பொறுமை இல்லையென்றால்.. மன்னித்துவிடுங்கள் நம் சமூகத்தை காப்பாற்றுவது கடினம்... குறிப்பாக உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்வி குறியாகிவிடும். இலஞ்சம் இன்னும் தழைத்தோங்கி சமூக விரோதிகளால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகிவிடும். இலட்ச கணக்கில் செலவழித்தும் தரமான கல்வி கிடைக்காது, தரமான மருத்துவ வசதி கிடைக்காது, தரமான உணவு பொருட்கள் கிடைக்காது. ஏனென்றால் உயிர்வாழ தேவையான அனைத்தும் இலஞ்சம் என்ற கரை படிவதால் அனைத்து துறைகளிலும் போலியானவர்கள் ஆதிக்கப் பெறுவர். அதனால் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமே கேள்விகுறியாகிவிடும்.

நீங்கள் பொறுமையை கடைபிடித்து உங்கள் கடமையை செய்தால்தான்  இலஞ்சத்தால் கொழுத்துள்ள அரசு அதிகாரிகள் கன்னியத்துடனும், கட்டுப்பாடுடனும் செயல்படுவர் என்பதை நீங்கள் உணர வேண்டும். எனவே சிந்தியுங்கள்!!! உங்கள் கடமையை செய்யுங்கள்!!! பொறுமையை கடைபிடித்து இலஞ்சத்தை ஒழியுங்கள்!!!

குறிப்பு: நான் பொறுமையாக இருந்து இக்கடமைகளை செய்ததால் பல அரசு துறைகளிடம் இலஞ்சம் இல்லாமல் பட்டா உட்பட பல சேவைகளைப் பெற்றுள்ளேன். மற்றவர்களுக்கும் இவ்வழிமுறை மூலம் பல அரசு சேவைகளைப் பெற வழிவகுத்துள்ளேன்.

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...