இலஞ்சம் வாங்கும் கயவர்கள் உணர
வேண்டும் இலஞ்சம் வாங்குவது பாவம் என்று.
அவர்கள்
உணர வேண்டும் ஏழை எளியோரின் உழைப்பினை சுரண்டுவது அயோக்கியத்தனம் என்று.
அவர்கள்
உணர வேண்டும் உரிமையோடு கேட்க அவர்கள் அப்பன் வீட்டு சொத்து அல்ல.
அவர்கள்
உணர வேண்டும் ஏழையிடம் சுரண்டிய பணத்தை வைத்து நிம்மதியான வாழ்க்கை வாழ
முடியாதென்று.
அவர்கள்
மனம் திருந்தி மக்கள் சேவையை உண்மையாக தொடர்ந்தால் மன்னிப்பு கிடைக்கும்.
இல்லையேல்
பிறகு மன்டியிட்டாலும் வாழ்வில் நிம்மதியற்று தவிக்க நேரிடும்.
இந்த
எச்சரிக்கை மணியை ஒலித்தவர் வழக்கறிஞர், சி.பிரபு. இவர் இலஞ்சம்
வாங்கும் அதிகாரிகளையும், ஏழைகளை இழிவாக நடத்தும்
அதிகாரிகளையும் அனுகி அவர்கள் செய்யும் தவறுகளை எடுத்துரைத்து அதற்கான தீர்வுகளைப்
பெற முயற்சித்து வருகிறார். தற்போது அத்தகைய அதிகாரிகள் செய்யும் தவறுகளை
ஆவணப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்காக தொடரவும் தயாராகி
வருகிறார்.
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box