Sunday, 5 May 2019

தமிழகத்தில் உள்ளாட்சியின் அதிகாரம் அதிகாரிகள் கையில்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் ஊராட்சியிலும் நகராட்சி மன்றங்களிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. எனவே பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பதிலாக அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி உள்ளாட்சி தேர்தல் நடத்த தாமதமாக்கிக் கொண்டே இருக்கின்றனர். இதனால் நகரங்களை காட்டிலும் கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகாரிகளிடம் உள்ளூர் பிரச்சனைகள் குறித்த புரிந்துணர்வு இல்லை
அரசு நியமித்துள்ள அதிகாரிகளான வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அவர்களுக்கு கீழ் செயல்படும் சிறப்பு அதிகாரிகளுக்கு கிராமங்கள் குறித்த தேவைகளை அறியும் அளவிற்கு அவர்களுக்கு புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் கிராமங்களின் பிர்ச்சணைகள் புரியாத நிலையில் அவற்றிற்கு தீர்வு காண முடியவதில்லை.
எடுத்துக்காட்டாக கிராமங்களில் ஓடைகள், ஏரிகள், நீர்பிடி பகுதி, குளம், குட்டைகள் ஆகியவை எங்கெங்கு உள்ளது என்பதை கிராம மக்களிடம் கலந்து ஆலோசணை செய்து அவற்றிற்கேற்ப தூர் வாருதல், சீரமைத்தல், ஆக்கிரமிப்பை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தவறுகின்றனர். மேலும் நிலத்தடி நீரை பெருக்கும் நோக்கத்தோடு தடுப்பணைகள் கட்டுதல், குளங்கள் வெட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபடும்போது இவ்வதிகாரிகள் கிராம மக்களிடம் கலந்து ஆலோசணை செய்யாமல் தன்னிச்சையாக தேவையில்லாத இடத்தில் அப்பணிகளில் செய்யப்படுகின்றன. இத்தகைய செயலால் அரசின் பணம் வீணாவதோடு நில்லாமல் மழை நீர் வீணாகும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

இதுவே முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி மக்களின் பிரதிநிதிகள் உள்ளாட்சி நிர்வாகத்தை நடத்தும்போது, பிரதிநிதி அப்பகுதியை சேர்ந்தவர் என்பதால் கிராமத்தில் ஆங்காங்கே உள்ள பிரச்சணைகளை அறிந்து அப்பிரச்சணைக்கு ஏற்றவாறு சிறப்பாக செயல்பட ஏதுவாக இருக்கும். மேலும் அவர்கள் நாள்தோரும் மக்களின் பார்வையில் இருப்பதால் மக்களுக்கு பதில் சொல்லும் நிலையில் இருப்பார்கள்.

ஆனால் தற்போது பொறுப்பில் உள்ள தனி அலுவலர்களோ பொறுப்பற்ற பல காரியங்களை அப்பகுதிகளின் தேவையை உணராமல் செய்து வருகின்றனர்.  
வட்டார வளர்ச்சி அலுவலர் (கிளைகள் ஊராட்சி) அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் தனி அலுவலர்கள் கிராம ஊராட்சியின் தேவைகளை நேரடியாக பார்வையிடுவதையும் தவர்த்து வருகிறார்கள். கேட்டால் அவர்களுக்கு 10க்கும் மேற்பட்ட கிராமங்களை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் எப்போது?

தமிழக அரசுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணம் இருப்பதுபோல தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஒருசில காரணங்களைக் காட்டி உயர்நீதிமன்றத்திடமும் உச்சநீதிமன்றத்திடமும் கால அவகாசம் கேட்டுகொண்டப்டியேதான் இருக்கின்றது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மூன்று மாத கால அவகாசம் கேட்டு மனு அளித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளாட்சி வாக்காளர் பட்டியலை சரிபார்த்தபிறகே நடத்த முடியும் என்று உச்சநீதிமன்றத்திடம் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட அடுத்த மூன்று மாத காலம் கடந்த பிறகும் உள்ளாட்சி தேர்தல் நடப்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவே தமிழகத்தில் தற்போதைக்கு உள்ளாட்சிகளில் மக்களின் ஆட்சிக்கு வழியில்லை. ஒரு சில அதிகாரிகளின் அதிகாரத்தின் பிடியிலேயே உள்ளாட்சி அமைப்புகள் மேலும் சில காலம் சிக்கி தவிக்க நேரிடும்போல் தெரிகிறது. 

ஆசிரியர் குறிப்பு: சி.பிரபு, வழக்கறிஞர்

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box