Friday, 27 March 2020

சட்டத்திற்கு நேர்மாறாக செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்கள்

சட்டம் சொல்கிறது கிராம நிர்வாக அலுர்,  தாம் பணிபுரியும் கிராமத்தில் வசிக்கவேண்டுமென்று,
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார்கள் அது சாத்தியமில்லையென்று!

சட்டம் சொல்கிறது இலஞ்சம் வாங்குவது குற்றமென்று,
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் அது அவரது கடமையென்று!

சட்டம் சொல்கிறது பட்டா மாற்ற ரூ.60/- போதுமென்று
சட்டம்
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் அது போதாதென்று!

சட்டம் சொல்கிறது ஏழை எளிய மக்களிடம் கண்ணியத்தோடு நடக்கவேண்டுமென்று,
கிராம நிர்வாக அலுவலரோ ஏழை எளியோரிடம் சுடுசுடுவென்கிறார்!

சட்டம் சொல்கிறது  ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கு வீடு தேடிச் சென்று சேவைகளை வழங்க  வேண்டுமென்று,
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் ஊனமுற்றோரும், முதியோரும் அவரின் அலுவலகம் வந்து காத்திருக்க வேண்டுமென்று!

சட்டம் சொல்கிறது கிராமத்தின் வளத்தை சூரையாடும் கயவனை காவல் அதிகாரிக்கு காட்டிகொடுக்க வேண்டுமென்று,
ஆனால் கிராம நிர்வாக அலுவலரோ கிராம வளத்தை கூட்டிக்கொடுக்கிறார்!

சட்டம் சொல்கிறது கிராமத்தில் சூறையாடப்படும் கனிம வளங்களுக்கு கிராம நிர்வாக அலுவலரே பொறுப்பென்று,
ஆனால் கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் சூறையாடும் கயவர்களிடம் இலஞ்சம் வசூலிப்பதுமட்டும்தான் அவரின் பொறுப்பென்று!

சட்டம் சொல்கிறது கிராம நிர்வாக அலுவரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று  அரசுக்கு வருவாயை உறுதிபடுத்துவதென்று,
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் அவர் வருவாயை உறுதிபடுத்தவென்று!

ஆக சட்டத்திற்கு நேர்மாராக இன்று சில/பல  கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. 

#கிராம நிர்வாக அலுவர்  #சட்டம்  #பட்டா #இலஞ்சம்

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box