Saturday, 18 May 2024

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமிக்க அரசு நிலத்தில் உள்ள மரங்களை வெட்டுகிறார்கள், ஒரு சிலர்  அதனை விற்று அதன் மூலம் பணம் பார்க்கும்  வேளையில் ஈடுபடுகிறார்கள். அத்தகைய நபர்களுக்கு  மரங்கள் பற்றிய புரிந்துணர்வே இல்லை என்பதையே இது காட்டுகிறது. 

ஆனால் தெய்வ வழிபாடுகளில் மரத்திற்கு முன்னிடம் கொடுத்தது நம் தமிழர் மரபு. வாகை மரத்தை 'கடவுள் வாகை' என்றும், வேப்ப மரத்தை 'தெய்வம் சான்ற பாரரை வேம்பு' என்றும் சிறப்பிக்கிறது சங்க இலக்கியம். 

வேப்ப மரத்தை கடவுளாக பாவிக்கும் மக்கள் வாழும்  அதே தமிழகத்தில் ஒரு சிலர் வெட்டவும்  துடிக்கிறார்கள். அதுவும் அரசு புறம்போக்கில் உள்ள மரங்களை மனசாட்சியின்றி வெட்டுகிறார்கள். ஒரு சிலர் அரசு இடத்தில் உள்ள  மரங்களை  வெட்ட எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடனே இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லவிரும்புவது என்னவென்றால்  "முதலில் மரங்களை நட்டு அவைகளை வளர்க்க  கற்றுக்கொள்ளுங்கள்". 

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம் என்ற உண்மையை புரிந்துகொள்ளுங்கள். ஒரு மரத்தில் பலவகையான உயிரினங்கள் வாழ்கின்றன என்ற உண்மையை ஆறறிவுள்ள மனிதர்கள் உணர மறுக்கிறார்கள். மரத்தில் பல பறவையினங்கள் (ஈ இனங்கள் உட்பட) கூடுகட்டி வாழ்கின்றன. அதுமட்டுமல்லாமல் அதில் பல பூச்சி, வந்து இனங்கள் கூட மாற கிளைகளை வாழ்கின்றன. அதே போன்று மரங்கள் தரும் காய் கனிகள் மூலம் பல உயிரினங்களுக்கு (மனிதர்களுக்கும் ) உணவு தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆக மரங்கள் பல உயிரினங்களுக்கு  இருப்பிடமாகவும், உணவு அளிக்கக்கூடிய கொடையாகவும் திகழ்கின்றன. மேலும் மனிதர்களுக்கும் கூட கடும் வெயிலில் இளைப்பாற  நிழல்களை தருகின்றன என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.  


மேலே நான் சொன்னவை எதுவும் தங்களுக்கு  புரியவில்லை என்றாலோ ,  பைத்தியக்காரத்தனமான விளக்கம் என்று தாங்கள் கருதினாலோ, மேலும் படிக்கவும்,,,😁😁

அரசு இடத்தில் மரங்களை வெட்டினால் அது திருட்டுத்தனம் ஆகும். அரசு பொருளை திருடுவதோடு, காக்கா, குருவிகள் போன்ற பல வகையான உயிரினங்களின் இருப்பிடத்தடையும் திருடுவதாகும். எனவே மரம் வெட்டுதல் குறிப்பாக அரசு இடத்தில் அனுமதியின்றி  மரம் வெட்டினால் வெட்டுபவனுக்கு  தண்டனை உறுதி  என்ற சட்டபூர்வ உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள். 

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம் என்ற உண்மையை உணர்ந்து, மரத்தை வெட்டுவதற்கு  பதிலாக மரங்களை வளர்ப்போம்! நம்முயிரையும், பல்லுயிர்களையும்  காப்போம்!


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box