Search This Blog

Tuesday, 22 January 2019

ஏழை என்றால் எலக்காரமா? பாகம்-1

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள். ஆனால் தற்போது தமது தமிழகத்தில் பெரும்பாலான அரசு அதிகாரிகளின் நடவடிக்கைகளைப் பார்த்தால் ஏழை எளிய மக்களை அடிமையாக பார்ப்பதுபோலதான் தெரிகிறது. அதிகாரிகள் சொல்வதற்கெல்லாம் தலையாட்ட சொல்கிறார்கள். அவர்கள் எடுக்கும் சர்வாதிகார முடிவுக்கெல்லாம் ஏழை எளிய மக்கள் கேள்வி கேட்காமல் கட்டுப்படவேண்டுமாம். ஏழை எளிய மக்களுக்களின் சம உரிமைகளை பெரும்பாலான அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. மாறாக அவர்களின் உரிமைகளை எவ்வித குற்ற உணர்வும் இன்றி பறித்து வருகின்றனர். அவர்களின் இத்தகைய செயல் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்பதை உணர மறுக்கின்றனர். 
 
சமீபத்தில் உளுந்தூர்பேட்டை தாலுக்காவை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரும் 70 வயது மூதாட்டியின் நிலத்தில் உள்ள பனை மரங்களை வெட்டி சாய்த்துவிட்டு அரசு அதிகாரிகள் சட்டவிரோதமான வகையில் அவரது நிலத்தை அபகரித்து அவ்விடத்தில் அருகில் அமைந்துள்ள பள்ளிக்கான சுற்றுச்சுவரை கட்டியுள்ளனர். ஆனால் அந்த மூதாட்டியிடம் எவ்வித முன் அனுமதியும் பெறவில்லை. அவருக்கு சட்டப்படியான இழப்பீட்டு தொகையும் வழங்கவில்லை. காரணம் அம்மூதாட்டியை சமஉரிமை பெற்ற குடிமகளாகவே கருதவில்லை நமது அரசு அதிகாரிகள். ஏனேன்றால் அந்த பெண்மனி ஒரு ஏழை விவசாயி. அவருக்காக ஏன் என்று கேட்க ஆளில்லை. அவருக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளார். அவரும் வெளியூருக்கு சென்று கூலி வேலை செய்துகொண்டிருக்கிறார்.

ஆக விழிப்புணர்வு அற்ற ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருப்பதற்காக சம்பளம் பெறும் அரசு அதிகாரிகளே ஏழையின் அறியாமையை பயன்படுத்தி அவர்களின் உரிமைகளை பரித்து வரும் பரிதாபம் தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நடந்த வண்ணமே உள்ளது. 

ஆனால் இத்தகைய செயல்களை செய்யும் அதிகாரிகள் வரும் காலத்தில் பதில் சொல்லவேண்டி வரும். ஏழைகளை எலக்காரமாக நினைத்து அவர்களின் உரிமைகளையும் உடைமைகளையும் பரிக்கும் அதிகாரிகளை சட்டம் ஒருநாள் தண்டிக்கும். அந்த நாள் வெகு தூரம் இல்லை. 

#சமஉரிமை #ஏழை

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...