தமிழகத்தில்
உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களின்
உரிமைகள் பல ஆண்டுகளாக மீறப்பட்டுதான் வருகின்றன. ஒவ்வொரு நாட்களும் அவர்களின்
உரிமைகளுக்கு மதிப்பளிக்க தவறி வருகின்றனர் அரசு அதிகாரிகள்.
நமது
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைவருக்கும் சமத்துவ உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து மத்திய மாநில அரசுகளும்
விவசாயிகள் மற்றும் விவாசாய கூலி தொழிலாளர்களுக்கு பல வகையான சட்டங்களையும், சலுகைகளையும்
அறிவித்து வருகிறது. ஆனால் அவைகள் அனைத்தும் முறையாக அரசு அதிகாரிகளால்
நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்று பார்த்தால் . இல்லை என்று ஆணித்தனமாக சொல்லும்
அளவிற்கு நிலமை உள்ளது.
ஏற்கெனவே
நமது சமூகம் விவசாயி என்றாலே கேவலமாக பார்க்கும் அளவிற்கு ஒரு மோசமான மனநிலையைக்
கொண்டுள்ளது. காரணம் விவசாயத்தில் பணம் சம்பாதிக்க முடியாது, அது ஒரு
இலாபகரமான தொழில் இல்லை என்ற எண்ணம்தான். இத்தகைய நிலைக்கு அரசு அதிகாரிகள்
முக்கிய காரணமாவர். அவர்களின் அலட்சியத்தாலும், எதற்கெடுத்தாலும் இலஞ்சம்
கேட்கும் பழக்கத்தாலும் கிராமத்தில் வாழும்
விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிளாலிகளின் வாழ்க்கை நாளுக்கு நாள்
கடினமாகிக்கொண்டே போகிறது.
விவசாயம்
செய்ய பயம்
தற்போது
விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்யவே பெரும்பாலனோர் பயப்படும்
அளவிற்கு அரசு அதிகாரிகளின் போக்கு உள்ளது. காரணம் ஒரு ஏழை விவசாயி தான் பல ஆண்டு
காலமாக உழுதுவரும் நிலத்திற்கு பட்டா வாங்க ரூ.5000 முதல் ரூ.10000 வரை கிராம நிர்வாக
அலுவலருக்கும், துணை வட்டாட்சியருக்கும் இலஞ்சம் தர வேண்டியுள்ளது. இலஞ்சம்
கொடுக்கவில்லை என்றால் பட்டா மாற்ற விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிடும். அடங்கல்
வாங்க வேண்டுமென்றால் ரூ.500 வரை இலஞ்சம் கொடுக்க வேண்டும் .
அதுமட்டுமல்லாமல் அடிமை போன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தார்
அலுவலகத்தில் காத்திருக்க வேண்டும். அதிகாரிகளின் இழிவு சொற்களை கேட்டு
சகித்துக்கொள்ள வேண்டும் . இவை அனைத்தையும் சகித்துக்கொண்டால்தான் விவசாயிகளின்
உரிமையைப் பெற முடியும். இல்லையேல் அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும். இத்தகைய
அரசு அதிகாரிகளின் செயல்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆர்டிகல் 19(1) (g) –க்கு
எதிரானதாகும். அதன்படி விவாசாயிகளை அவர்களின் தொழிலை செய்ய இடையுராக இருக்கும்
அதிகாரிகள் தண்டிக்கதக்கவர்கள் ஆவர் என்பதை அரசு அதிகாரிகள் புரிந்துகொள்ள
வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் அவர்கள்
தண்டிக்கத்தக்கவர்கள் ஆவர்.
விவசாயி
வாழ்க்கையே போரட்டமாகிவிட்டது
தற்போது
விவசாயி என்பவன் இவைகள் அனைத்தையும் சகித்துக்கொண்டு சிலர் இலஞ்சம் கொடுத்தும், சலுகைகளைப்
பெற அதிகாரிகளிடம் அலைந்தும் சலுகைகளை பெற்றுவருகின்றனர். சிலர் இலஞ்சம் கொடுக்க
மறுத்து அரசு சலுகைகளை பெற முடியாமல் இதுநாள் வரை போராடிக்கொண்டே இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல்
சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்றவற்றை பெறவும்
இலஞ்சம் கொடுத்தால் தான் வேலை முடியும் என்ற
நிலை உள்ளது. இலஞ்சம் தர மறுத்தால் சான்றிதழ் மறுக்கப்படும் அல்லது பல முறை அலைக்கழிக்கப்படுவாரக்ள்
. ஆக விவசாய மற்றும் கூலித்தொழிலாளர்கள் ஒவ்வொறு முறை அரசு சார்ந்த சேவை மற்றும் சலுகைகளைப்
பெற அரசு அதிகாரிகளின் இழிவுபடுத்து செயல்கள் மற்றும் வார்த்தைகளை சகித்துக்கொண்டு
போராட வேண்டியிருக்கிறது. ஆக ஊருக்கே சோறுபோடும் விவசாயிகளை இழிவுபடுத்தி அவர்களை அடிமை
போன்று நடத்தி அவர்களிடமே வெட்கமில்லாமல் சோற்றுக்கு கையேந்தி நிற்கிறார்கள் சில அரசு
அதிகாரிகள்.
வெட்கம்
இல்லாமல் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளே! நீங்கள் விவசாயிகளை தொடர்ந்து இழிவுபடுத்திகொண்டு
அவர்களின் உரிமையை மீறும் செயலில் ஈடுபட்டால் நாளைக்கு உங்களுக்கு எவ்வளவு பணமிருந்தாலும்
சோறு கிடைக்காம செத்துடுவிங்க. தயவு செய்து சிந்தியுங்கள். திருந்துங்கள். விவசாயியை
மதியுங்கள் .
குறிப்பு: இங்கே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் சி.பிரபு, வழக்கறிஞர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்போது கண்கூடாக பார்த்ததாகும்.
#விவசாயி #இலஞ்சம் #சமூகம்
Exactly you are right Mr. Prabhu. All government departments like this going on, In this situation we are react with related government officers in right way..
ReplyDeleteஅதுவும் விவசாயி என்றாலே அரசு அதிகாரிகள் சற்று கேவலமாகத்தான் நடத்துகின்றனர் முருகவேல்.
Delete