![]() |
இயற்கை விவசாயம் |
தமிழா! உமக்கு சோறு போடும் விவசாயி தவிக்கிறான்!
அவன் நிலத்தில் வேலை செய்ய கூலி ஆட்கள் கிடைப்பதிலை!
உற்பத்திசெய்த பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை!
வங்கியில் விவசாய கடன் கிடைப்பதில்லை!
தமிழா விவாசாயம் என்றாலே வீணாபோனவன் என்று நினைக்கும் அளவிற்கு இன்றைய
சமூகம் மாறிவிட்டது. அத்தகைய சமூகத்தை/மனிதர்களை பார்க்கும்போது எனக்கு பரிதாபமாகத்தான்
உள்ளது. ஏனென்றால் அவர்களுக்கு புரிவதில்லை அப்படி நினைப்பதனால் அவர்கள் தாமே தனது
தலையில் மண் வாரிபோட்டதற்கு சமம் என்று.
சில வருடங்களாக அவர்கள் அப்படி நினைத்ததால்தான் தற்போது
விரைவில் அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கோடு பெரும்பாலான விவசாயிகள் செயற்கை உரம்
பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். செயற்கை உரம் அதிகம் கலப்பதால் உணவே நஞ்சாக
மாறுகிறது. அப்படிபட்ட நஞ்சு கலந்த உணவைத்தான் தற்போது பெரும்பாலானோர் உண்டு
வாழ்கின்றனர். எனவேதான் அடிக்கடி மருத்துவமனை & மருந்து உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
நமது மக்கள். இதற்கெல்லாம் காரணம் சோறுபோடும் விவசாயிகளுக்கு உரிய மரியாதை தர மறுத்த
சமூகமும் அரசும்தான். ஆனால் அப்படிபட்ட அரசை உறுவாக்கியது யார்? இச்சமூகம்தானே?
என்று நம் சமூகம் விவசாயத்தையும் விவசாயியையும் வீண் என்று
நினைத்ததோ அன்று முதலே அவர்களின் நிம்மதியையும் உடல் ஆரோக்கியத்தையும் இழந்து
வருகின்றனர். இச்சூழலிலும் சில விவசாயிகள் விடா முயற்சியோடும் கடின உழைப்போடும்
இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். அப்படிபட்ட விவசாயிகளின் முக்கியதுவத்தை
உணர்ந்து அவர்களை ஊக்குவித்தால்தான் செயற்கை முறையில் பயிர் செய்யும் விவசாயிகள் இயற்கை
முறைக்கு மாறுவார்கள். அப்படியோறு சூழல் நிலவும் பட்சத்தில் இயற்கை விவசாயிகளின்
எண்ணிக்கை உயரும். மக்களின் மனநிம்மதியும் உடல் ஆரோக்கியமும் பெறுகும்.
அரசும் அரசு அலுவலர்களும் ஒரு புறம் இருக்கட்டும் முதலில் மக்களாகிய
நீங்கள் விவசாயிகளை மதிக்க கற்றுகொள்ளுங்கள். பிறகு விவசாயிகளுக்கும் பாமர மக்களின்
உடல் ஆரோக்கியத்திற்கும் எதிரான அரசியல்வாதிகளை ஓட்டு என்ற ஆயுதத்தை பயன்படுத்தி அப்புறபடுத்திவிடலாம்.
இயற்கை விவசாயிகளை ஊக்குவித்து நமது தமிழ் இனத்தை காப்பாற்றுங்கள்!!!
#இயற்கைவிவசாயம் #விவசாயி