Search This Blog

Showing posts with label கிராம நிர்வாக அலுவலர். Show all posts
Showing posts with label கிராம நிர்வாக அலுவலர். Show all posts

Friday, 27 March 2020

சட்டத்திற்கு நேர்மாறாக செயல்படும் கிராம நிர்வாக அலுவலர்கள்

சட்டம் சொல்கிறது கிராம நிர்வாக அலுர்,  தாம் பணிபுரியும் கிராமத்தில் வசிக்கவேண்டுமென்று,
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார்கள் அது சாத்தியமில்லையென்று!

சட்டம் சொல்கிறது இலஞ்சம் வாங்குவது குற்றமென்று,
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் அது அவரது கடமையென்று!

சட்டம் சொல்கிறது பட்டா மாற்ற ரூ.60/- போதுமென்று
சட்டம்
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் அது போதாதென்று!

சட்டம் சொல்கிறது ஏழை எளிய மக்களிடம் கண்ணியத்தோடு நடக்கவேண்டுமென்று,
கிராம நிர்வாக அலுவலரோ ஏழை எளியோரிடம் சுடுசுடுவென்கிறார்!

சட்டம் சொல்கிறது  ஊனமுற்றோர் மற்றும் முதியோருக்கு வீடு தேடிச் சென்று சேவைகளை வழங்க  வேண்டுமென்று,
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் ஊனமுற்றோரும், முதியோரும் அவரின் அலுவலகம் வந்து காத்திருக்க வேண்டுமென்று!

சட்டம் சொல்கிறது கிராமத்தின் வளத்தை சூரையாடும் கயவனை காவல் அதிகாரிக்கு காட்டிகொடுக்க வேண்டுமென்று,
ஆனால் கிராம நிர்வாக அலுவலரோ கிராம வளத்தை கூட்டிக்கொடுக்கிறார்!

சட்டம் சொல்கிறது கிராமத்தில் சூறையாடப்படும் கனிம வளங்களுக்கு கிராம நிர்வாக அலுவலரே பொறுப்பென்று,
ஆனால் கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் சூறையாடும் கயவர்களிடம் இலஞ்சம் வசூலிப்பதுமட்டும்தான் அவரின் பொறுப்பென்று!

சட்டம் சொல்கிறது கிராம நிர்வாக அலுவரின் முக்கிய பொறுப்புகளில் ஒன்று  அரசுக்கு வருவாயை உறுதிபடுத்துவதென்று,
கிராம நிர்வாக அலுவலர் சொல்கிறார் அவர் வருவாயை உறுதிபடுத்தவென்று!

ஆக சட்டத்திற்கு நேர்மாராக இன்று சில/பல  கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. 

#கிராம நிர்வாக அலுவர்  #சட்டம்  #பட்டா #இலஞ்சம்

Monday, 18 February 2019

மக்களைத் தேடி கிராம நிர்வாக அலுவலர்கள்; அவர்களைத் தேடி மக்கள் அல்ல

கிராம நிர்வாக அலுவலர்கள் உமது எஜமானர்கள் அல்ல
அவர்கள் உமது வேலைக்காரர்கள். 
 
கிராம நிர்வாக அலுவலர்கள் அரசாங்கம் அல்ல
அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் வேலைக்காரர்கள்.
 
கிராம நிர்வாக அலுவலர்களை நாடி நீங்கள் செல்லத்தேவையில்லை.
அவர்கள்தான் உங்கள் கிராமத்தை நாடி வரவேண்டும். 
 
கிராம நிர்வாக அலுவலருக்கு நீங்கள் பயப்பட தேவையில்லை. 
இலஞ்சமும் தர தேவையில்லை. 

 கிராம நிர்வாக அலுவர்கள் சர்வாதிகாரமாக செயல்பட முடியாது.
அவர்களும் நமது நாட்டின் சட்டத்தை மதித்தாக வேண்டும். 
 
நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சிதான் நடைபெறுகிறது. 
கிராம நிர்வாக அலுவலர்கள் அதற்குட்பட்டுதான் நடக்க வேண்டும் 
 
எனவே மக்களே கிராம நிர்வக அலுவலருக்கு அஞ்சாதீர்கள்...அவர்கள் உமது  எஜமானர்கள் அல்ல...வேலைக்காரர்கள் ஆவர். 


மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...