Search This Blog

Showing posts with label சட்டத்தின் ஆட்சி. Show all posts
Showing posts with label சட்டத்தின் ஆட்சி. Show all posts

Wednesday, 8 December 2021

சட்டத்தின் ஆட்சி மூலம் பணியிடத்தின் கண்ணியம் காத்திட வேண்டுமா?

பணியிடத்தின் கண்ணியம் காத்திட பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு) 2013 சட்டத்தை  செயல்படுத்துங்கள்

பொதுவாக சட்டத்தின் ஆட்சிக்குட்பட்டு நிறுவனங்களை நடத்துவதால் தேவையில்லாத பல பிரச்சனைகளை வருமுன் தடுக்கலாம். ஆனால் நமது நாட்டில் சட்டதிட்டங்கள் தெரியாமலும், தெரிந்தாலும் அதனுடைய முக்கியத்துவத்தை உணராமலும் பல்வேறு நிறுவனங்கள் சிறு, குறு முதல் பெரிய நிறுவனங்கள் வரை இயங்கி வருவது அனைவ்ரும் அறிந்ததே. அத்தகைய கண்டுகொள்ளப்படாத சட்டங்களில் ஒன்றுதான் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டம், 2013. ஆங்கிலத்தில் The Sexual Harassment at Workplace (Prevention, Prohibition and Redressal) Act,2013 (POSH ACT) என்பார்கள்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் 

  பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்

பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு தகுந்த தண்டனை வழங்கவும், எதிர்காலத்தில் பணியிடங்களில் பாலியல் சீண்டல் சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் தடுக்கவும், அத்தகைய செயல்களுக்கு தடைவிதிக்கவும் துரித நடவடிக்கை எடுக்க ஏதுவாக 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் உள்புகார் குழு (INTERNAL COMMITTEE) அமைக்கப்பட வேண்டும். அதேபோன்று பத்துக்கும் கீழே உள்ள பணியாளர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களிலிருந்து பெறப்படும் பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் குழு LOCAL COMMITTEE அமைக்கப்பட வேண்டும். இக்குழுவை நியமிப்பது அரசின் கடமையாகும்.

ஆனால் இச்சட்டத்தின்படி மேற்கண்ட குழுக்கள் முறையாக அமைக்கப்படாத காரணத்தால் பணியிடங்கள் பலவற்றில் பாலியல் சீண்டல்களால் பெண்கள் (குழந்தைகள் உட்பட) பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். சமீப காலத்தில் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி பாதிப்படைந்து வருகின்றனர் என்ற செய்திகள் அதிகரித்துகொண்டே வருகின்றன.

இச்சட்டம் குறித்து ஒரு புறம் அறியாமையினாலும் மற்றொறு புறம் இச்சட்டம் குறித்து தவறான புரிதல்களாலும் பல நிறுவனங்கள் உள்புகார் குழுக்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன. இத்தகைய சூழலால் பணியாளர்களிடையே பாலியல் சீண்டல் குறித்த விழிப்புணர்வு ஏற்பாடாமல், பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் தொடர் கதையாகி வருகிறது.

உள்புகார் குழு குறித்த தவறான புரிதல்

தமிழகத்தில் பல ஆயிரம் நிறுவனங்கள் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆனால் அவைகள் அனைத்தும் சட்டப்பபடி உள்புகார் குழுவை அமைதுள்ளனவா என்றால் நிச்சயமாக இல்லை என்று குறிப்பிடும் அளவிற்குத்தான் தற்போதைய நிலை உள்ளது. காரணம் அத்தகைய குழுவை அமைத்தால் பெண்கள் பொய்யான புகார்களை அளிப்பார்கள் என்ற அச்சமும்,  நிறுவனத்திற்கு வீண் செலவு என்றும் அபத்தமான அச்சம் கொள்கின்றனர் நிறுவன உரிமையாளர்கள். ஆனால் அத்தகைய நிறுவனங்களை நிர்வகிப்பவர்களுக்கு புரிவதில்லை உள்புகார் குழு அமைப்பதன் மூலம் தனது நிறுவனத்தின் கண்ணியத்தையும் அங்கு பணிபுரிபவர்களின் கண்ணியத்தையும் காப்பாற்றலாம் என்று.

சில நிறுவனங்கள் இக்குழுவை அமைப்பதனால் எந்த பயனும் இல்லை என்று மெத்தனம் காட்டுகின்றன. ஆனால் அந்நிறுவனங்களை நிர்வகிப்பவர்களுக்கு புரிவதில்லை பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பதன் மூலம் தேவையில்லாத அவப் பெயரை தடுக்க முடியும் என்று. ஒரு சிறந்த நிறுவனத்தின் அடையாளம் என்பது தேவையில்லாத பிரச்சனைகளை வருமுன் தடுப்பதும், அத்தகைய பிரச்சனைகள் வருமாயின் முறையான தீர்வு காண்பதும்தான். எனவே நிறுவனத்தின் பெயருக்கும், பணியாளர்களின் கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்கும்  கலங்கம் விளைவிக்கக்  கூடிய பாலியல் சீண்டல் சம்பவங்களை தடுக்கவும், தீர்வுகாணவும்  உள் புகார் குழு இன்றியமையாததாகும்.

பாலியல் சீண்டல்கள் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பணியிடங்களில் POSH சட்டம் குறித்து பயிற்சி பட்டரை, விழிப்புணர்வு வகுப்புகள் போன்றவற்றின் மூலம் எத்தகைய செயல்களெல்லாம் பாலியல் சீண்டல்களாக கருதப்படும் என்றும், பாலியல் சீண்டல்களுக்கு ஆளானவர்கள் எந்த வகையில் யாரிடம் புகார் அளித்து பரிகாரம் பெற்றுக்கொள்ளலாம் போன்றவற்றை பணியாளர்களுக்கு   கற்பிப்பது ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு  நிறுவனத்தின் (பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து நிறுவனங்களின்) கடமையாகும்.

அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல்தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால் பணியிடத்தின் கண்ணியமும், பணியாளர்களின் கண்ணியமும் பாதுகாக்கப்படும். தேவையில்லாத பிரச்சணைகள் தடுக்கப்பட்டு நிறுவனங்கள் தங்களது பணிகளில் தங்கு தடையின்றி கண்ணியத்தோடு செயல்படும்.  

எனவே வாருங்கள் சட்டத்தின் ஆட்சி மூலம் பணியிடங்களில் பெண்களின் கண்ணியத்தோடு நிறுவனத்தின் கண்ணியத்தையும் காத்திடலாம்!!! 

#பணியிடம் #பாலியல்சீண்டல்கள் #துன்புறுத்தல்#உள்புகார்குழு

இது சம்மந்தமான மேலும் கட்டுரைகள்:

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ளூர் குழு மூலம் நீதி

Monday, 31 May 2021

சட்டத்தின் ஆட்சி எதிர் ஆளுங்கட்சியின் ஆட்சி


திருப்பெயர் கிராமத்தில் ஆளும் திமுக கட்சியைச் சேர்ந்த சிலர் தமிழ்நாட்டின் 2021 பேரவை தேர்தல் முடிவுகள் அறிவித்த அடுத்த (03.05.2021) நாளிலிருந்தே பதவியை துஷ்பிரயோகம் செய்து கனிமங்களை கொல்லையடிப்பதையும் சுற்றுச் சூழலை சீரழிப்பதலும் ஈடுபட தொடங்கிவிட்டனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் தனது கட்சி பதவியை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை அச்சுறுத்தியும், கிராம மக்களை அச்சுறுத்தியும் மலைகள், பாறைகள், கல்லாங்குத்து ஆகிவற்றை  அரசின் அனுமதியின்றி வெட்டியெடுத்து பல இடங்களில் பூமிக்கடியில் நீர்மட்டத்தை தாண்டிய ஆழத்திலும் சக்திவாய்ந்த வெடிகளை வைத்து கல் குவாரிகளை இயக்கி வருகின்றனர்.

அனுமதி மறுக்கப்பட்டும் கல் குவாரி இயங்குகிறது

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஏற்கெனவே கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில் 12.03.2021 அன்றே மேற்குறிப்பிட்ட குவாரி உரிமையாளருக்கு கனிம வளத்துறையால் அனுமதி மறுக்கப்பட்டு அக்குவாரி உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று உறுதியளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருப்பெயர் கிராமத்தில் இயங்கிவந்த அக்குவாரி உரிமையாளரின் கல் குவாரியும் மூடப்பட்டது.

ஆனால் தமிழ்நாட்டின் 2021 பேரவைத் தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாள் முதலே அக்குவாரி உரிமையாளர் திருப்பெயர் கிராமத்தில் கல் குவாரியை இயக்கத் தொடங்கி விட்டார், அதுவும் முன்பு இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த வெடிகளை நிலத்தடி நீர் மட்டத்தை தாண்டிய ஆழத்திலே வைத்து வருகிறார். இதனால் திருப்பெயர், திருப்பெயர் தக்கா மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களான சிறுவத்தூர், பரிந்தல், எடைக்கல் ஆகிய கிராமங்களின் இருப்பிடங்கள் வரை அதிர்வு ஏற்பட்டு பல வீடுகள் விரிசலும் அடைந்து வருகின்றன.

ஆளும் கட்சியின் பெயரையும், அந்நபரின் கட்சி பொறுப்பையும் துஷ்பிரயோகம் செய்து கற்களை திருடிச்செல்வதோடு நில்லாமல் அப்பகுதியின் சுற்றுப்புறத்தையும் (நிலத்தடி நீர் உட்பட) சீரழித்து வருகிறார்.

 

திருடு கண்டுபிடிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை

இதில் பேரதிர்ச்சி என்னவென்றால் மேற்குறிப்பிட்டுள்ள நபர் அரசுக்குத் தெரியாமல் 4,19,061 Cu.mt (கன மீட்டர்) அளவுகொண்ட சாதாரண கற்களை வெட்டி திருடிச்சென்றுள்ளார் என்ற உண்மையை கனிம வளத்துறை கண்டுபிடித்து திருக்கோவிலூர் கோட்டாசியருக்கு மேற்கண்ட நபர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்த பிறகும் இரவு பகல் பாறாமல் மேற்கண்ட நபர் கனிமத்தை திருடுவதையும், சுற்றுச்சூழலை அழிப்பதையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

புகார்களுக்கு நவடிக்கை இல்லை

வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பொதுமக்கள் புகார் அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய அவலத்தால் சட்டத்தின் ஆட்சி ஆளும் கட்சியின் ஆட்சிக்கு முன் தோற்றுவிடுமோ என்று மக்களுக்கு ஐயம் ஏற்பட தொடங்கிவிட்டது.

கோரோனா காலத்திலும் சுற்றுச்சூழலை மாசாக்கிவரும் இத்தகைய நபர்கள் மீது ஆளும் கட்சியான திமுக, தனது கட்சியின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும்சட்டத்தின் ஆட்சியை  வலுவிழக்க வைக்கும் வகையிலும் நடந்துகொண்டு வரும் நபரின் மீது  கடுமையான நடவடிக்கை  எடுத்து  சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது அவசியமாகிறது.

ஆளும் கட்சி அவசியத்தை உணராமல் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் சட்டத்தின் ஆட்சி எதிர்  (Vs) ஆளுங்கட்சியின் ஆட்சி என்ற இந்த போட்டியில் சட்டத்தின் ஆட்சி வெல்ல வேண்டும் என்ற முயற்சியோடு எனது சட்டப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி ஆளுங்கட்சியின் ஆட்சிதான் நடக்கிறது என்ற மம்மதையில் மிதப்போருக்கு இனி வரும் காலங்களில் சிறந்த பாடம் புகட்டும் காலம்  விரைவில் வரும். திருப்பெயர் கிராமம் புத்துணர்வு பெறும். 

#கல்குவாரி #சுற்றுச்சூழல்

#ஆளும்கட்சி #சட்டத்தின்ஆட்சி


Monday, 8 March 2021

அநீதியை சட்டத்தின் ஆட்சியால் வெல்லமுடியாதா என்ன?


Representative image/Credit:iStockphoto

அநீதி இழைக்கும் கல் குவாரி கயவனே... என் இயற்கை அன்னையின் ஈரக்குலையை அறுப்பவனே?

 

உன்னால் அரசு அதிகாரியை வாங்க முடியும், சட்டத்தின் ஆட்சியை வாங்க முடியுமா?

 

அரசு சொத்தை கொள்ளையடிக்கும் உமக்கு இவ்வளவு திமிரிருக்க,

அரசு கல்லூரியில் சட்டம் படித்த எமக்கு எவ்வளவு திமிரிருக்கும்?  

 

கயவர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு நீ கொள்ளையடித்தால்

எம்மக்களின் ஒத்துழைப்போடு உம்மை எதிர்கொள்ளமாட்டோமா?

 

பல்லுயிர்களை அழிக்கும் உமக்கே அவ்வளவு துணிவிருக்கும்போது

பல்லுயிர்களை பாதுகாத்துவரும் இந்த விவசாயி மகனுக்கு  எவ்வளவு துணிவிருக்கும்?

 

உம்போல் கயவர்களை இயக்க திருடர்கள் இருப்பார்கள்,

ஆனால் எம்மை இயக்க இயற்கை அளித்த பல்லுயிர்களும், எம் கிராம மக்களும் இருக்கிறார்கள்

 

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க நீ பலரின் கால் பிடிப்பாய்,

ஆனால் யமக்கு அது அவசியமில்லை. யாம் கம்பீரத்தோடு போராடுவோம், வெற்றி காணும்வரை.

 

அநீதியை சட்டத்தின் ஆட்சி துணை கொண்டு வீழ்த்துவோம். இயற்கை அன்னையை குளிரவைப்போம்.

 

அநீதி வீழ்த்தப்படும் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும். 

 

#சட்டத்தின்ஆட்சி #கல்குவாரி  


Sunday, 28 July 2019

சட்டத்தால் முடியாதா?... முடியாமல் போகட்டும்... யாம் முயற்சி செய்வோம்...

அதிகாரிகள் அனைவரும் பணத்திற்கு விலைபோவார்களாம்..
அவர்கள் திருடணுக்குத்தான் துணைபோவார்களாம்..
சட்டத்தை வைத்து ஒன்னும் பண்ணமுடியாதாம்..
அதனால திருடர்களுக்கும், தேசத்திற்கு துரோகம் புரியும் அதிகாரிகளுக்கும் ஆமாம் சாமி போடனுமாம்..

இவ்வாறு கூறுபவர்கள் எமக்கு நல்ல புத்திமதி கூறுகிறார்களாம்...

இந்த புத்திமதி கூறுகிறவர்கள் சட்டத்தைப் பயன்படுத்தியதில்லை..

முயற்சி செய்ததில்லை... ஆனால் புத்திமதி மட்டும் சொல்வார்களாம்..
அதனை யாம் கேட்க வேண்டுமாம்...

எமக்கு வெற்றி கிட்டாமல் போகட்டும்,
திருடர்கள் திருடிகொண்டே போகட்டும்,
அரசு அதிகாரிகள் துரோகம் செய்துகொண்டே போகட்டும்,

யாம் முயற்சி செய்துகொண்டே இருப்போம்,
சட்டத்தின் கதவுகளை இயன்ற வரை தட்டிக்கொண்டே இருப்போம்..
முயற்சிகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்...
திருடனுக்கு மீண்டும் மீண்டும் திருட தைரியம் இருக்கும்போது,
அதனை தடுக்க எமது முயற்சி ஏன் தொடர்ந்துகொண்டே இருக்கக் கூடாது???

சட்டத்தால் முடியாதா? முடியாமல் போகட்டும்...

யாம் முயற்சி செய்வோம்.. எமக்கு இறைவன் துணை இருப்பான்... சட்டப்படி போராட நினைக்கும் நல்ல உள்ளம் படைத்தவர்கள் துணையிருப்பார்கள்...

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...