கடந்த 2006லிருந்து 2010 வரை ஜான்சன் & ஜான்சன் உபரி நிறுவனமான டுபே (DePuy) 4700 நோயாளிகளுக்கு
தொடை மாற்று அறுவை சிகிச்சை சாதனங்களை
இந்தியாவில் விற்றுள்ளது. அவைகள் தரமற்றவை என்று அடிக்கடி புகார்கள் வந்ததால்
அச்சாதனைத்தை தயாரிப்பதையும் விற்பதையும் நிறுத்துக்கொண்டது அந்நிறுவனம். தரமற்ற தொடை
மாற்று சாதனம் பொருத்தப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர்களின்
இழப்புகளை ஈடு செய்யவும், மேலும் அதன் பக்கவிளைவுகளை கண்டறிந்து
முறையாக சிகிச்சை அளிக்க அவர்களை கண்டறிவது மிகவும் அவசியம்.
நிறுவனம் மற்றும் மருத்துவமனைகளின் கைவிரிக்கும் போக்கு
இதில் ஆச்சரியம் என்னவென்றால் நோயாளிகளின் உயிர் சம்மந்தமான சாதனைத்தை விற்ற
நிறுவனத்திடம் யார் யாருக்கு அச்சாதனங்கள் விற்கப்பட்டது என்ற தகவல் எதுவும்
இல்லையாம். அத்தகைய தகவல்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு அச்சாதனத்தை
பொருத்திய மருத்துவமனையிடமும் அத்தகவல்கள்
இல்லையாம். சாதனத்தை தயாரித்து விற்ற நிறுவனம் தாங்கள் தரகர் மூலமாக விற்றதால்
அவர்கள் வெவ்வேறு இடத்திலே இருப்பதால் எங்களுக்கு நோயாளிகளின் தகவல்களை சேகரிக்க கடினமாக
உள்ளது என்கின்றது. மருத்துவமனைகளோ எங்களிடம் அவ்வளவு பழைய ஆவணங்கள் இல்லை என்று
கைவிரிக்கின்றன.
அரசின் கவனகுறைவு
ஏற்கெனவே அரசின் அலட்சியத்தால் குறைபாடுள்ள தொடை மாற்று சாதனங்களை எவ்வித தடையும்
இன்றி விற்பனை செய்த நிறுவனத்தை கண்கானிக்க தவறியாதால் நமது நாட்டில் சுமார் 14000
நோயாளிகள் இச்சாதனத்தால் அவதிப்படுகிறார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஆனால் 2009-ம் ஆண்டிலேயே
ஆஸ்திரேலியா அரசானது இச்சாதனம் தரக்குறைவாக உள்ளதாலும் அது குறித்து நோயாளிகளிடம் புகார்கள்
வந்த காரணத்தால் இச்சாதனத்தை அங்கு விற்பனை செய்வது தடைசெய்யப்பட்டது. ஆனால் இத்தகவலை
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இந்தியாவிடம்
மறைத்து 2010 வரை 4700 நோயாளிகளுக்கு தொடை மாற்று சாதனத்தை விற்றுள்ளது. நோயாளிகள்
கொடுத்த புகார் வெளிப்படையாக தெரியும் வரை இந்நிறுவனம் இந்தியர்களை ஏமாற்றி வந்து ஆகஸ்டு
2010-ல் தான் தரம் குறைவான அச்சாதனத்தை சந்தையிலிருந்து திரும்ப பெற்றது. இந்நிலையில்
இந்திய அரசு ஜான்சன் & ஜான்சன் தொடை மாற்று சாதன
குறைபாட்டால் அவதிப்படும் நோயாளிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்கவும் அவர்களுக்கு தேவைப்படும்
மீள அறுவை சிகிச்சைகளுக்கும் உறிய இழப்பீடு வழங்கும்
வகையில் சில பரிந்துரைகள் செய்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருகின்றன. அதன்படி
ரூ.20 இலட்சத்திலிருந்து ரூ.1.20 கோடி வரை இழப்பீடு தொகை வழங்குமாறு பரிந்துரை
செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அப்பரிந்துரை அடங்கிய அறிக்கை இதுநாள்வரை வெளியாகவில்லை
என்பது ஏன் என்றுதான் புரியவில்லை.
2006 முதல் 2010 வரை 4700 நோயாளிகளுக்கு ஜான்சன் & ஜான்சன் தொடை மாற்று சாதனம் (ASR HIP IMPLANT) பொருத்தப்பட்டுள்ளதாக
அந்நிறுவனம் கூறுகிறது. ஆனால் அதில் 1080 நோயாளிகளை மட்டுமே அவர்களால் கண்டறிய முடிந்தது
என்று கூறப்படுகிறது. ஒரு உயிர் காக்கும் மருத்துவ கருவி/சாதனம் தயாரித்து விற்பனை
செய்யும் நிறுவனத்தின் இத்தகைய அலட்சியமான போக்கு மிகவும் வேதனைக்குறியது.
நோயாளிகள் செய்யவேண்டியது
இது குறித்து பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு ஒவ்வொரு
மாநிலத்திலும் ஒரு குழு அமைக்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள DIRECTOR, DRUG CONTROLLER-ஐ அனுகி தங்களது தொடை
மாற்று அறுவை சிகிச்சை குறித்து இழப்பீடு பெற தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் சென்று ஆலோசணை
பெற்றுக்கொள்ளலாம்.