Representative image/Credit:iStockphoto
அநீதி இழைக்கும்
கல் குவாரி கயவனே... என் இயற்கை அன்னையின் ஈரக்குலையை அறுப்பவனே?
உன்னால்
அரசு அதிகாரியை வாங்க முடியும், சட்டத்தின் ஆட்சியை வாங்க முடியுமா?
அரசு சொத்தை
கொள்ளையடிக்கும் உமக்கு இவ்வளவு திமிரிருக்க,
அரசு கல்லூரியில்
சட்டம் படித்த எமக்கு எவ்வளவு திமிரிருக்கும்?
கயவர்களைக்
கைக்குள் போட்டுக் கொண்டு நீ கொள்ளையடித்தால்
எம்மக்களின்
ஒத்துழைப்போடு உம்மை எதிர்கொள்ளமாட்டோமா?
பல்லுயிர்களை
அழிக்கும் உமக்கே அவ்வளவு துணிவிருக்கும்போது
பல்லுயிர்களை
பாதுகாத்துவரும் இந்த விவசாயி மகனுக்கு எவ்வளவு
துணிவிருக்கும்?
உம்போல்
கயவர்களை இயக்க திருடர்கள் இருப்பார்கள்,
ஆனால் எம்மை
இயக்க இயற்கை அளித்த பல்லுயிர்களும், எம் கிராம மக்களும் இருக்கிறார்கள்
சட்டத்தின்
பிடியிலிருந்து தப்பிக்க நீ பலரின் கால் பிடிப்பாய்,
ஆனால் யமக்கு
அது அவசியமில்லை. யாம் கம்பீரத்தோடு போராடுவோம், வெற்றி காணும்வரை.
அநீதியை
சட்டத்தின் ஆட்சி துணை கொண்டு வீழ்த்துவோம். இயற்கை அன்னையை குளிரவைப்போம்.
அநீதி வீழ்த்தப்படும்
சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும்.
#சட்டத்தின்ஆட்சி #கல்குவாரி