![]() |
தேர்தல் Image Credit: iStockphoto |
வாக்குக்கு பணம் கொடுப்பது எந்த அளவுக்கு சட்ட விரோதமோ அந்த அளவுக்கு பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதும் சட்டப்படி குற்றமாகும். சட்டப்படிமட்டுமல்லாமல் தர்மப்படியும் பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் வாக்களிப்பது என்ற செயலானது நேர்மையான முறையில் தேர்தலை சந்திக்கும் வேட்பாளர்களுக்கும், நமது நாட்டிற்கும் செய்யும் பச்சை துரோகம் ஆகும்.அத்தகைய செயல் ஜனநாயகத்திற்கு நாம் செய்யும் கொடுஞ்செயலாகும் என்பதை உணர வேண்டும்.
திருடனுக்கு
துணைபோவது எந்த அளவுக்கு குற்றமோ அந்த அளவுக்கு பணத்திற்கு வாக்களிப்பதும் பெரும்
குற்றமாகும் என்பதை ஒவ்வொருவரும் உணராத வரை இத்தகைய துரோக செயல் தொடர்ந்து கொண்டே
இருக்கும்.
பணம் வாங்கிக்கொண்டு
வாக்கு செலுத்துவது என்பது நமது எதிர்கால சந்ததியருக்கும் நாம் செய்யும் மிகப்
பெறிய துரோகமாகும் என்பதையும் மறக்க வேண்டாம். நமது வாக்குகளை ரூ.1000-த்திற்கும் ரூ.2000-க்கும் விற்றுவிட்டு திருடர்களுக்கு அதிகாரம்
கொடுத்தால் அரசின் சொத்துக்கள் திருடப்படும், இயற்கை சீரழிக்கப்படும். வெள்ளம், வறட்சி போன்றவற்றால் நாம் தவிக்க நேரிடும். நமது
பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இலஞ்சம் தலைவிரித்தாடும்.
பெரும்பாலான அரசு சலுகைகளைப் பெற இலஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
உண்மையாகவும்
நேர்மையாகவும் இருக்கும் வேட்பாளர்களை ஒதுக்கிவிட்டு வாக்குக்கு பணம்
கொடுத்தவனுக்கு வாக்கு செலுத்திய பிறகு பதவியில் உள்ள நபர் இலஞ்சம் கேட்கிறார்.
பணியை சரிவர செய்யவில்லை என்று கூச்சலிடுவதில் பயனில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர
வேண்டும்.
எனவே இனிவரும்
தேர்தல்களிலாவது பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதை முழுமையாக தவிர்த்து நேர்மையான
வேட்பாளர்களுக்கு மட்டும் அவர்களிடம் பணம் பெறாமல் ஜனநாயக முறையில் வாக்களிக்க
வேண்டும்.
நாம் நமது ஜனநாயக கடமையான தேர்தலில் வாக்கு செலுத்துவதை நேர்மையான முறையில் செய்தால்தான் நமக்கும் ஜனநாயக முறையில் கிடைக்கவேண்டிய சலுகைகள் யாவும் முறையாக கிடைக்கும். ஆனால் பணநாயகத்தை ஊக்குவித்தால் அரசு சலுகைகளைப் பெறக் கூட இலஞ்சம் கொடுக்க நேரிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
வாருங்கள் வரும் காலத்திலாவது
நமது வாக்குகளை விற்பதை தவிர்த்து ஜனநாயகத்தை வெல்ல வைப்போம். பணநாயகத்தை தோர்க்கடிப்போம் !!!
இனிவரும் பாரளுமன்றம், சட்டப்பேரவை, ஊராட்சி & நகராட்சி தேர்தல்களில் நாம் அளிக்க இருக்கும் வாக்குக்கு பணம் வாங்கும் பழக்கத்தை தவிர்த்து நேர்மையான தலைவர்களை தேர்ந்தெடுப்போமாக !!!
#ஜனநாயகம் #பாரளுமன்றம் #சட்டப்பேரவை, #ஊராட்சி #நகராட்சி #தேர்தல்