பொது இடங்களில் பாலியல்
துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களும் உள்ளூர் குழு மூலம் நீதி பெறலாம்
பணியிடத்தில்
பாலியல் துன்புறுத்தல், தடுத்தல்
மற்றும் குறைதீர்ப்பு சட்டம் 2013-ன்படி பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பாலியல்
துன்புறுத்தல் குறித்த புகார்களை விசாரணை
செய்து நீதி வழங்க உள்புகார் குழு INTERNAL
COMMITTEE உள்ளது. அதே போன்று பத்து பணியாளர்களுக்கும்
கீழ் உள்ள நிறுவனங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும்
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்த புகார்களை விசாரித்து நீதி வழங்க
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் குழு LOCAL COMMITTEE உள்ளது. இக்குழுவானது
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சமூக நலத்துறை அலுவலரின் கீழ் இயங்கி
வருகிறது.
உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரம் பெற்ற உள்ளூர் குழு
உள்ளூர்
குழு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியின் தலைமையில் செயல்படும். இக்குழுவுக்கு
உரிமையியல் நீதமன்றத்திற்கு நிகரான அதிகாரத்தை பணியிடத்தில் பாலியல்
துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும்
குறைதீர்ப்பு, 2013, சட்டம்
வழங்கியுள்ளது. பாதிப்பு
ஏற்பட்ட பெண்ணின் இழப்புக்கு ஏற்றவாறு உள்ளூர் குழு LOCAL COMMITTEE என்ற இக்குழுவுக்கு குற்றவாளிகளுக்கு எதிராக அபதாரம், பணியிடை நீக்கம், பணி நீக்கம்
போன்ற தண்டனைகளை வழங்க அதிகாரம் உள்ளது.
இக்குழு
உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிகரானது என்பதால் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட
பெண் உள்ளூர் குழுவில் புகார் அளிக்கும் அதே சமயம் காவல்துறையிடமும் புகார்
அளிக்கலாம். ஏனென்றால் குற்றவாளிக்கு சிறைதண்டனை விதிக்கும் அதிகாரம் உள்ளூர்
குழுவுக்கு இல்லை. எனவே பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் புகார் அளித்தால் இந்திய
தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்
விசாரணை நடைபெற்று குற்றம் நிறுபிக்கப்படின் குற்றவாளிக்கு உரிய சிறை தண்டனை
வழங்கப்படும்.
ஆக
பாலிய துன்புறுத்தல், பாலியல்
சீண்டல்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒரே சமயத்தில் உள்ளூர் குழுவிலும், காவல்துறையிடமும்
புகார் அளிக்கலாம். ஒன்று சிவில் வழக்கு மற்றொன்று கிரிமினல் வழக்கு ஆகும். காவல் துறையிடம்
புகார் அளிக்க அச்சப்படும் பெண்கள் உள்ளூர் குழுவிடம் புகார் அளிப்பது சிறந்தது.
பொது
இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்
பேருந்து
நிறுத்தங்கள், தெருக்கள், கோயில்கள், விளையாட்டு
மைதானங்கள், குடிநீர் குழாய்
அமைந்துள்ள இடங்கள் மற்றும் இதர பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும்
பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களையும் LOCAL COMMITTEE எனப்படும் உள்ளூர்
குழுவிடம் அளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட
நபர் தனது எழுத்து மூல புகாரை நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சம்மந்தப்பட
மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அதாவது உள்ளூர் குழுவுக்கு அளிக்கலாம்.
உள்ளூர்
குழுவானது புகார் கிடைத்தவுடன் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை செய்து துரிதமாக தீர்வு
வழங்கும்.
தமிழகத்தில்
தற்போதைய நிலை
பணியிடத்தில்
பாலியல் துன்புறுத்தல், தடுத்தல்
மற்றும் குறைதீர்ப்பு சட்டம் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து அமலில் இருந்தும்
உள்ளூர் குழு செயல்படுவது போன்று தெரியவில்லை. அப்படியொரு குழு ஒன்று இருப்பது
அரசு அதிகாரிகளுக்கே தெரியாத நிலையில்தான் தற்போது சூழ்நிலை உள்ளது. இந்நிலையில்
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு
இப்படியொரு குழு உள்ளது என்பது தெரியாமலே உள்ளது.
அரசுபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை
இச்சட்டத்தின்படி உள்ளூர் குழு, உள்குழு
போன்ற குழுக்கள் குறித்தும், எச்செயல்களெல்லாம்
பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும் போன்ற அம்சங்கள் குறித்தும் பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளுக்கும் குறைந்தது மாதம் ஒரு முறையாவது விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு, பயிற்சி
பட்டரைகள் நடத்த வேண்டும். ஆனால் அரசு இவ்வளவு காலமாக அதனை செய்யாத காரணத்தால்
தற்போது தமிழகத்தில் பல இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த வண்ணம்
உள்ளது.
குறிப்பாக
கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் பல காலமாக கண்டுகொள்ளாமல்
புதைந்து போகின்றது. நகரங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. பெண்களுக்கு எதிரான
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால்
பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகளும் மிகப்பெறிய துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
இச்சட்டம்
அமலுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆனபிறகும் பெரும்பாலானோர் நினைக்கின்றனர்
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து காவல் துறையை மட்டுமே
அனுக வேண்டும் என்று. அவர்களுக்கு தெரியவில்லை உள்ளூர் அல்லது உள்குழு மூலமும்
புகார் அளிக்களாம் என்று.
நாம்
என்ன செய்ய வேண்டும்
அரசு
செய்வது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் நமது குழந்தைகளுக்கும் நம்மை
சூழ்ந்துள்ளோர்களுக்கும் உள்ளூர் குழு மற்றும் உள்குழு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். பெண்களுக்கு எதிராக நடக்கும்
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல் சம்பவத்தை சம்மந்தப்பட்ட குழுவிடம்
புகாராக அளிக்கலாம் என்ற தகவலை நம்மால் இயன்ற வரை மற்றவர்களிடம் பகிர்ந்து
பெண்களின் கண்ணியத்தை நிலைநாட்டலாம் வாருங்கள்!!
#உள்ளூர்குழு #பாலியல்துன்புறுத்தல் #துன்புறுத்தல் #தடுத்தல்
#குறைதீர்ப்பு #LOCALCOMMITTEE
இது சம்மந்தமான மேலும் கட்டுரைகள்:
சட்டத்தின் ஆட்சி மூலம் பணியிடத்தின்
கண்ணியம் காத்திட வேண்டுமா?