Through this blog, I will be sharing challenges faced while doing my noble duty of using the rule of law in search of justice. This Blog is made available to readers as a part of my initiative to share my experience and also to provide the readers with general information and understanding of relevant law. As such, this does not constitute specific legal advice. By using this blog you understand and acknowledge that there is no relationship of whatsoever nature between you and me.
Search This Blog
Saturday, 18 May 2024
மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்
Sunday, 21 August 2022
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்
பணியிடத்தில் பாலியல் இயல்பு கொண்ட அருவருக்கத்தக்க வார்த்தையை பயன்படுத்தியும், அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபட்டு பெண்ணை துன்பத்திற்கு உள்ளாக்குவதும், பாலியல் இச்சைக்கு இணங்காத பெண்ணின் பணியில் பல்வேறு இடையூறுகளை உருவாக்கி அவரது பணியில் குறுக்கிட்டு அவரது பணிச் சூழலை பாதகமாக்கும் செயல்கள் அனைத்தும் பணியிடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் ஆகும். அத்தகைய துன்புறுத்தல்கள் பெண்களுக்கு நடக்காத வண்ணம் தடுக்கவும், தடை செய்யவும் மேலும் அத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி வழங்கவும் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டம், 2013-ல் வழிவகை உள்ளது.
பணியிடம் என்றால் என்ன?
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தின்படி பணியிடம் என்பது பெண்கள் பணிபுரியும் தனியார்
மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பெண் குழந்தைகள் பயிலும் பள்ளி, கல்லூரிகள் ஆகியவை அடங்கும். அதாவது பெண்கள் பணிபுரியும்
எல்லா தருணங்களும் பணியிடமாக கருதப்படும். இச்சட்டத்தின் நோக்கமென்பது பெண்கள்
பணிபுரியும்போது அவர்கள் கண்ணியத்தையும், பாதுகாப்பையும் உறுதிசெய்வதாகும்.
எனவேதான் பணியிடத்திற்கான அர்த்தம் இச்சட்டத்தில் விரிவாக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு பணியிடத்தில் அல்லது நிறுவன/ அலுவலக
வளாகத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் செயல்கள் அனைத்தும் இந்த சட்ட
வரம்புக்குள் அடக்கமாகிறது. அதில் நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர, ஒப்பந்த ஊழியர்கள் போன்ற அனைத்து பெண் ஊழியர்களும், அந்நிறுவனத்திற்கு வருகை புரியும் பெண் வாடிக்கையாளர்கள், பெண் ஒப்பந்ததாரர்கள், பெண் விருந்தினர்கள்
போன்ற அனைத்து பெண்களுக்கும் இச்சட்டம் பொருந்தும். அதாவது அந்நிறுவனத்தில் அல்லது
நிறுவன வளாகத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல்
துன்புறுத்தல் ஏற்பட்டால் அது குறித்து விசாரணை செய்து உறிய நடவடிக்கை எடுப்பது
அந்நிறுவனத்தின் கடமையாகும்.
பத்து அல்லது பத்துக்கும் மேற்படட ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனம்
அல்லது அலுவலகத்தில் உள்குழு என்ற அமைப்பு மூலமாகவும், பத்துக்கும் குறைவான ஊழியர்கள் பணிபுரியும் பட்சத்தில்
உள்ளூர் குழு என்ற அமைப்பு மூலமாகவும் தீர்வு காண பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தில் வழிவகை உண்டு.
தடுப்பு நடவடிக்கைகள்
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு மற்றும்
பாதுகாப்பு சட்டத்தின்படி பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுக்க
ஒவ்வொரு நிறுவனமும் இச்சட்டம் குறித்து பணியிடத்தில் பணிபுரியும்
பணியாளர்களுக்கும், உள்குழு உறுப்பினர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அதே போன்று எவையெல்லாம் பாலியல் துன்புறுத்தல்களாக
கருதப்படும் என்பதையும் தனது பணியாளர்களுக்கு புரியவைப்பது ஒவ்வொரு நிறுவனங்கள்
மற்றும் அலுவலகங்களின் தலையாய கடமையாகும்.
துரித நடவடிக்கை
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணிண் பாதுகாப்பு
மற்றும் அவருக்கு ஏதுவாக பணிச்சூழலை ஏற்படுத்த பாதிப்பு ஏற்படுத்திய நபருக்கு
பணியிடை மாற்றம், பணி இடைநீக்கம் போன்ற துரித நடவடிக்கைகள் எடுக்க உள்
குழு மற்றும் உள்ளூர் குழுவுக்கு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும்
குறைதீர்ப்பு சட்டத்தின் மூலம் உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிகரான
அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இழப்பீடு வழங்க வழிவகை
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் உளவியல்
ரீதியாகவும், உடல் ரீதியாகவும், தொழில்பூர்வாமாகவும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவருக்கு
மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்பு
ஏற்படுகிறது. எனவேதான் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும்
குறைதீர்ப்பு சட்டத்தின்படி
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்படட பெண்ணிற்கு ஏற்பட்ட
பாதிப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் இழப்பிற்கு ஏற்றவாறு
உரிய இழப்பீடு வழங்கும் அதிகாரம் உள் குழு
மற்றும் உள்ளூர் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இரகசியத்தன்மை காக்கப்படும்
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார்
சம்மந்தமான தகவல்கள் உள் குழு அல்லது உள்ளூர் குழுவால் இரகசியமாக
வைத்துக்கொள்ளப்படும். பாதிக்கப்பட்டவரின் பாதுகாப்பு கருதி அவை இரகசியமாக
வைத்துக்கொள்ள பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தில் வழிவகை
செய்யப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட பெண் அச்சமின்றி புகார் அளிக்கலாம்.
தாமதமற்ற நீதி
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டத்தின்படி பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட நபருக்கு உள்
குழு அல்லது உள்ளூர் குழுவால் விசாரணை நடைபெறுவதால் பாதிக்கப்பட்டவருக்கு
குறித்துரைத்த காலகட்டத்திற்குள் நீதி கிடைக்க வழிவகை உள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் எழுத்துபூர்வ பூகாரை உள்
குழு அல்லது உள்ளூர் குழுவுக்கு அளித்தாலே போதுமானதாகும். உரிமையியல்
நீதிமன்றம்போல் கட்டணம் செலுத்த தேவையில்லை. அதேபோன்று அலையவும் தேவையில்லை.
உள் குழு அல்லது உள்ளூர் குழுவின் விசாரணையானது
இயற்கை நீதியின் கோட்பாட்டின்படி நடக்கும் என்பதால் விசாரணை துரிதமாக நடக்கும். எனவே பாதிக்கப்பட்டவருக்கு நீதியும் துரிதமாக கிடைக்கும்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு, தடை மற்றும்
குறைதீர்ப்பு சட்டத்தின்படி சம்மந்தப்பட்ட குழுவுக்கு புகார் அளித்து
துரித நீதியைப் பெற முடியும். எனவே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பணியிடத்தில் பெண்களின்
கண்ணியத்தைக் காத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து அரசு மற்றும் தனியார்
நிறுவனங்களும் முன்வரவேண்டும்.
Friday, 15 April 2022
குடும்ப பிரச்சனையில் காவல்துறையின் தலையீடு
![]() |
| குடும்ப பிரச்சனை |
நமது நாட்டில் ஏழை மற்றும் பணக்காரர், படித்தவர் மற்றும் படிக்காதவர் என்ற பாகுபாடின்றி மிகப் பெரும்பாலானோருக்கு அடிப்படை சட்டம் தெரியாத காரணத்தால் அவர்களின் குடும்ப பிரச்சனை அனைவற்றிற்கும் காவல்துறையினால்தான் தீர்வு தர முடியும் என்று எண்ணுகிறார்கள். அதனால்தான் கணவன் மனைவிக்குள் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கும் காவல்துறையை நாடுகின்றனர். சட்டம் குறித்த புரிந்துணர்வு அற்று கணவரோ அல்லது மனைவியோ காவல்துறையை அணுகும்போது காவல்துறையானது முதல் கட்ட விசாரணை செய்துவிட்டு அவர்கள் கொடுத்த புகார் குற்ற சம்பவம் இல்லாது அவை குடும்ப பிரச்சனையாக இருக்கும் பட்சத்தில் காவல்துறையின் கடமை என்னவாக இருக்கவேண்டும் என்றால் குடும்ப பிரச்சனையில் காவல்துறையின் தலையீடு என்பது சட்டவிரோதமானது என்றும் அதற்கு தீர்வு என்பது குடும்ப நல நீதிமன்றமே ஆகும் என்று அறிவுறுத்தி அனுப்பி வைப்பதே சிறந்ததாகும்.
ஏனென்றால் குடும்ப பிரச்சனைகளில் காவல்துறை தலையிட்டால் கணவர் மற்றும் மனைவிக்கிடையே உள்ள சிறு சிறு பிரச்சனைகள் கூட பூதாகரமாகி அவை அவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரிந்துவிட மிகப்பெரிய காரணமாகி விடும். அது அவர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் அவர்களின் குழந்தை(கள்), உறவினர்களையும் பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் அத்தகைய பிரச்சனை தேவையில்லாத சொத்து பிரச்சனைகள் மற்றும் அதனால் ஏற்படும் மனஸ்தாபங்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பழிவாங்கும் எண்ணங்களை தூண்டி குற்ற சம்பவங்களுக்கு வழி வகுக்கும் அபாயத்தையும் ஏற்படுத்தும். ஆக குடும்பம் என்ற பந்தத்தை காப்பாற்றிடவும், தேவையில்லாத குற்ற சம்பவங்களை தவிர்க்கவும் குடும்ப பிரச்சனையில் காவல்துறையின் தலையீடு துளி கூட இருக்கக் கூடாது.
எது குடும்ப பிரச்சனை? எது குற்ற சம்பவம்? என்று அறிவது எப்படி என்று நம்மில் பலருக்கு குழப்பம் ஏற்படுவதுண்டு. நீங்கள் குழம்ப வேண்டாம். கணவன் மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக ஏற்படும் சிறு சிறு வெறுப்பு விருப்புகள் குடும்ப பிரச்சனை ஆகும். மேலும் அத்தகைய வெறுப்பு விருப்பு காரணமாக இருவீட்டாருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளும் இந்த குடும்ப பிரச்சனையில் அடங்கும்.
குற்ற சம்பவம் என்பது வரதட்சனை கேட்டு தொல்லை கொடுப்பது, மனைவியின் மீது வன்முறையாக
நடந்துகொள்வது அதாவது அடிப்பது போன்ற துன்புறுத்தும் செயல்கள் ஆகியவை குற்ற
சம்பவங்களில் அடங்கும். குற்ற சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமே
காவல்துறையின் எல்லைக்கு உட்பட்டதாகும்.
எது குற்ற சம்பவம். எது குடும்ப பிரச்சனை என்று குழப்பமாக இருக்கும் பட்சத்தில் குடும்ப நல ஆலோசகரிடம் கலந்துகொண்டு முடிவு எடுப்பது சிறந்ததாக இருக்கும்.
கணவன் மனைவிக்குள் ஏற்படும் பெரும்பாலான குடும்ப பிரச்சனைக்கு தாம்பத்தியம் ஒரு மிகப் பெரிய காரணமாக அமைகிறது. திருமண வாழ்க்கையில் தாம்பத்தியம் என்பது ஒரு முக்கிய அங்கமாக இருக்கும் நிலையில் கணவன் மனைவிக்குள் தாம்பத்தியம் சார்ந்த புரிதல் இல்லாமல் போவதால் திருமண வாழ்க்கை நிம்மதியின்றி குடும்பத்தில் பல பிரச்சனைக்கு வித்திடுகின்றது.பல நேரங்களில் கணவனுக்கு தனது மனைவியிடம் ஏற்படும் உடல் மாற்றங்கள் குறித்த புரிந்துணர்வு இல்லாத காரணத்தால் அதாவது மாதவிடாய் காலங்களில் எத்தகையான உடல் மற்றும் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும் என்ற புரிந்துணர்வு இல்லாததால் தேவையில்லாதா எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் திருமண வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதேபோன்று ஒரு சில உடல் சார்ந்த குறைபாடுகளால் தாம்பத்தியத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டு அவை பல்வேறு குடும்பம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வித்திடுகின்றன. இத்தகைய குடும்ப பிரச்சனையில் காவல்துறையின் தலையீடு என்பது முற்றிலும் தவிர்க்கத்தக்கதாகும். மாறாக இத்தகைய சூழ்நிலைகளில் மருத்துவர் அல்லது குடும்ப நல ஆலோசகரிடம் அணுகுவதே சிறந்த தீர்வாகும்.
இதேபோன்று கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் பணி அல்லது இருப்பிட விருப்பம் சார்ந்த வேறுபாடுகளால் ஏற்படும் பிரச்சனைகளும் குடும்ப பிரச்சனைகளே ஆகும். அத்தகைய பிரச்சனைகளுக்கும் காவல்துறை தீர்வாக இருக்க முடியாது. மாறாக குடும்ப நல ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று அவர்களின் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யலாம்.
ஆனால் குடும்ப பிரச்சனைக்கு குறிப்பாக திருமணம் சார்ந்த கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தால் காவல்துறையால் தீர்வை கொடுக்க முடியாது. ஏனென்றால் குடும்ப பிரச்சனையில் காவல்துறைக்கு தலையிட அதிகாரம் இல்லை. ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் பலர் ஒரு சிலரின் தூண்டுதலின் பேரில் தனது தரப்பை மிகைப்படுத்த ஏதுவாக குற்ற சம்பவம் நடந்ததுபோல் ஜோடித்து புகார் அளிக்கின்றனர். அதன் விளைவு திருமண பந்தம் முறிவு வரை செல்கிறது. அதன் விளைவு அந்த குடும்பத்தின் எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்குகிறது.
Friday, 4 February 2022
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ளூர் குழு மூலம் நீதி
பொது இடங்களில் பாலியல்
துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களும் உள்ளூர் குழு மூலம் நீதி பெறலாம்
பணியிடத்தில்
பாலியல் துன்புறுத்தல், தடுத்தல்
மற்றும் குறைதீர்ப்பு சட்டம் 2013-ன்படி பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் ஒவ்வொரு நிறுவனத்திலும் பாலியல்
துன்புறுத்தல் குறித்த புகார்களை விசாரணை
செய்து நீதி வழங்க உள்புகார் குழு INTERNAL
COMMITTEE உள்ளது. அதே போன்று பத்து பணியாளர்களுக்கும்
கீழ் உள்ள நிறுவனங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும்
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்த புகார்களை விசாரித்து நீதி வழங்க
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் குழு LOCAL COMMITTEE உள்ளது. இக்குழுவானது
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சமூக நலத்துறை அலுவலரின் கீழ் இயங்கி
வருகிறது.
உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிகரான அதிகாரம் பெற்ற உள்ளூர் குழு
உள்ளூர்
குழு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரியின் தலைமையில் செயல்படும். இக்குழுவுக்கு
உரிமையியல் நீதமன்றத்திற்கு நிகரான அதிகாரத்தை பணியிடத்தில் பாலியல்
துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும்
குறைதீர்ப்பு, 2013, சட்டம்
வழங்கியுள்ளது. பாதிப்பு
ஏற்பட்ட பெண்ணின் இழப்புக்கு ஏற்றவாறு உள்ளூர் குழு LOCAL COMMITTEE என்ற இக்குழுவுக்கு குற்றவாளிகளுக்கு எதிராக அபதாரம், பணியிடை நீக்கம், பணி நீக்கம்
போன்ற தண்டனைகளை வழங்க அதிகாரம் உள்ளது.
இக்குழு
உரிமையியல் நீதிமன்றத்திற்கு நிகரானது என்பதால் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட
பெண் உள்ளூர் குழுவில் புகார் அளிக்கும் அதே சமயம் காவல்துறையிடமும் புகார்
அளிக்கலாம். ஏனென்றால் குற்றவாளிக்கு சிறைதண்டனை விதிக்கும் அதிகாரம் உள்ளூர்
குழுவுக்கு இல்லை. எனவே பாதிக்கப்பட்டவர் காவல்துறையிடம் புகார் அளித்தால் இந்திய
தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய செய்யப்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்
விசாரணை நடைபெற்று குற்றம் நிறுபிக்கப்படின் குற்றவாளிக்கு உரிய சிறை தண்டனை
வழங்கப்படும்.
ஆக
பாலிய துன்புறுத்தல், பாலியல்
சீண்டல்களால் பாதிக்கப்பட்ட பெண் ஒரே சமயத்தில் உள்ளூர் குழுவிலும், காவல்துறையிடமும்
புகார் அளிக்கலாம். ஒன்று சிவில் வழக்கு மற்றொன்று கிரிமினல் வழக்கு ஆகும். காவல் துறையிடம்
புகார் அளிக்க அச்சப்படும் பெண்கள் உள்ளூர் குழுவிடம் புகார் அளிப்பது சிறந்தது.
பொது
இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்
பேருந்து
நிறுத்தங்கள், தெருக்கள், கோயில்கள், விளையாட்டு
மைதானங்கள், குடிநீர் குழாய்
அமைந்துள்ள இடங்கள் மற்றும் இதர பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும்
பாலியல் துன்புறுத்தல் அல்லது பாலியல் சீண்டல்கள் குறித்த புகார்களையும் LOCAL COMMITTEE எனப்படும் உள்ளூர்
குழுவிடம் அளிக்கலாம்.
பாதிக்கப்பட்ட
நபர் தனது எழுத்து மூல புகாரை நேரடியாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ சம்மந்தப்பட
மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அதாவது உள்ளூர் குழுவுக்கு அளிக்கலாம்.
உள்ளூர்
குழுவானது புகார் கிடைத்தவுடன் முறையாக சம்மன் அனுப்பி விசாரணை செய்து துரிதமாக தீர்வு
வழங்கும்.
தமிழகத்தில்
தற்போதைய நிலை
பணியிடத்தில்
பாலியல் துன்புறுத்தல், தடுத்தல்
மற்றும் குறைதீர்ப்பு சட்டம் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து அமலில் இருந்தும்
உள்ளூர் குழு செயல்படுவது போன்று தெரியவில்லை. அப்படியொரு குழு ஒன்று இருப்பது
அரசு அதிகாரிகளுக்கே தெரியாத நிலையில்தான் தற்போது சூழ்நிலை உள்ளது. இந்நிலையில்
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கு
இப்படியொரு குழு உள்ளது என்பது தெரியாமலே உள்ளது.
அரசுபொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை
இச்சட்டத்தின்படி உள்ளூர் குழு, உள்குழு
போன்ற குழுக்கள் குறித்தும், எச்செயல்களெல்லாம்
பாலியல் துன்புறுத்தலாக கருதப்படும் போன்ற அம்சங்கள் குறித்தும் பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகளுக்கும் குறைந்தது மாதம் ஒரு முறையாவது விழிப்புணர்வு ஏற்படுத்த கருத்தரங்கு, பயிற்சி
பட்டரைகள் நடத்த வேண்டும். ஆனால் அரசு இவ்வளவு காலமாக அதனை செய்யாத காரணத்தால்
தற்போது தமிழகத்தில் பல இடங்களில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்த வண்ணம்
உள்ளது.
குறிப்பாக
கிராமப்புறங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் பல காலமாக கண்டுகொள்ளாமல்
புதைந்து போகின்றது. நகரங்களிலும் இதே நிலைதான் தொடர்கிறது. பெண்களுக்கு எதிரான
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால்
பெண்கள் குறிப்பாக பெண் குழந்தைகளும் மிகப்பெறிய துன்பத்திற்கு ஆளாகின்றனர்.
இச்சட்டம்
அமலுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆனபிறகும் பெரும்பாலானோர் நினைக்கின்றனர்
பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து காவல் துறையை மட்டுமே
அனுக வேண்டும் என்று. அவர்களுக்கு தெரியவில்லை உள்ளூர் அல்லது உள்குழு மூலமும்
புகார் அளிக்களாம் என்று.
நாம்
என்ன செய்ய வேண்டும்
அரசு
செய்வது ஒருபக்கம் இருக்கட்டும். நாம் நமது குழந்தைகளுக்கும் நம்மை
சூழ்ந்துள்ளோர்களுக்கும் உள்ளூர் குழு மற்றும் உள்குழு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். பெண்களுக்கு எதிராக நடக்கும்
பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் சீண்டல் சம்பவத்தை சம்மந்தப்பட்ட குழுவிடம்
புகாராக அளிக்கலாம் என்ற தகவலை நம்மால் இயன்ற வரை மற்றவர்களிடம் பகிர்ந்து
பெண்களின் கண்ணியத்தை நிலைநாட்டலாம் வாருங்கள்!!
#உள்ளூர்குழு #பாலியல்துன்புறுத்தல் #துன்புறுத்தல் #தடுத்தல்
#குறைதீர்ப்பு #LOCALCOMMITTEE
இது சம்மந்தமான மேலும் கட்டுரைகள்:
சட்டத்தின் ஆட்சி மூலம் பணியிடத்தின்
கண்ணியம் காத்திட வேண்டுமா?
Thursday, 20 January 2022
ECS Debit Mandate and its cancellation
| ECS Debit cancellation |
Yes.
Electronic Clearing System Debit mandate or the Auto Debit Clearing mandate given
to an institution by giving consent to deduct
particular amount periodically can be cancelled by the bank account holder at
any time as per his/her wishes. Nobody can compel the account holder to not to stop
or withdraw the ECS/Auto Debit mandate which was given for paying insurance
premiums, mutual funds, loan EMIs, for paying subscription amount to service
providers like Just Dial, which provides various services like providing leads
for various businesses.
However,
prior to placing cancellation request with the banker (account holding bank), it
is advisable to make a formal/written request with the service provider/user institution
to which you have given ECS debit mandate. However, the
account holder is entitled to withdraw the mandate /ECS debit instructions from
his/her banker even without involvement of the user institution. The
withdrawal request of the customer would be deemed as stop payment instruction
in cheque clearing system.
It
is advisable to withdraw the ECS debit prior to a month of the next due date so
that the bank or institution gets enough time to process the said request.
Auto Debit cancellation request of the bank
account holder has to be accepted
Your banker can not reject your request for cancellation of auto debit mandate since the relationship between the customer and Bank is of a creditor and a debtor and not of a Trustee. Therefore, the bank has no option to compel you to continue the auto-debit mandate against your will.
What if bank refuses to cancel your auto-debit
mandate?
If
a bank refuses to cancel your request for auto-debit mandate on the ground that
the account holder has to get NOC from the service provider, then such conduct
of the bank would be considered as unfair
trade practice and would also amount to deficiency in services of the said bank. The loss arises to the
account holder due to such refusal of the bank to cancel auto debit mandate
would have to be compensated by the concerned bank.
Similarly,
the service provider/user institution cannot compel you to pay only through ECS
or Auto Debit mandate. At any point of time, after giving a month notice
period, you can withdraw the ECS mandate and take steps to change the mode of
payment as per your convenience. The user institution cannot force you to
continue the ECS mandate against your will.
If
you find your services provider’s service quality is not up to the mark and you
want to cancel such subscription or you want to make some other mode of payment
for paying your utility bills, EMIs etc, then you can straightaway withdraw the
ECS debit mandate by making formal/written request to your banker.
#ECS #Autodebit #banking #banker
Monday, 17 January 2022
Unauthorized Electronic Banking Transaction: How to get refund?
| fraudulent transaction |
The unauthorized electronic transaction or fraudulent
deduction of money from our bank account or credit card can be thwarted if we keep pin number of
Debit Cards, Credit Cards and passwords of Phone banking, Internet Banking
services safe. Besides this, it is also necessary to keep safe custody of the
mobile phone which is linked with banking services.
Zero liability of a
customer
If customer loses money due to the deficiency in the
system or the due to negligence on the part of the bank and the customer
notifies the bank regarding the unauthorized electronic deduction within three days of getting
notification from the bank, then there would be no liability on the customer.
Limited Liability of a customer
In case the customer loses money due to the sharing of otp or cvv or the payment credentials with the third party, then the customer has to bear the entire loss until he/she reports the unauthorized transaction to the bank. Any loss occurring after the reporting of such loss would be borne by the bank.
In cases where the responsibility for the unauthorized
electronic banking transaction lies neither with the bank nor with the
customer, but lies elsewhere in the system and the customer notifies the bank
within four to seven working days of
receiving a communication of such transaction, the per transaction liability of
a customer will be limited to the transaction value or the amount mentioned in
the table given below, whichever is lower:-
For BSBD (Basic Savings Bank Deposit) Account, the maximum liability of the customer is Rs.5,000/-. Whereas
for all other savings account, pre-paid payment instruments and Gift Cards,
Credit Cards with limit up to Rs.5 Lakh, the maximum liability of the customer
is Rs.10,000/- and for all other Current/Cash Credit/Overdraft Accounts, the maximum liability of the
customer is Rs.25,000/-
It is pertinent to note that if the delay in reporting
is beyond seven working days, the
customer liability will be determined as per the bank’s Board approved policy
(decision with respect to the refund will be the discretion of the bank as per
their policy)
Timeline for refund
The bank has to make refund of the amount which has
been deducted unauthorized manner within 10 working days of the receiving notification
from the customer.
Mobile Phone and Email as
a means of receiving communication from bank
One has to keep the banking services linked with
recent phone number and email so that unauthorized deduction from the bank
account or credit cards gets intimated through the mobile number and e-mail.
After all, informing the bank about the unauthorized deduction of money at the
earliest increases the probability of refund from the bank.
Therefore, in order to get refund of the amount which
has been deducted due to the unauthorized electronic transaction or fraudulent deduction
of money from the bank account or credit card, the affected customer has to
immediately report to the bank about the unauthorized or fraudulent electronic
transaction.
Tuesday, 28 December 2021
உங்களிடம் ரூபே ஏடிஎம் கார்டு உள்ளதா ?
முறையாக பயன்படுத்தினால் முக்கியமான சலுகைகளைப் பெறலாம்
விசா
மற்றும் மாஸ்டர் கார்டுகளைப் போன்று ரூபே RuPay என்ற வகை ஏடிஎம்
கார்டுகளும் நமது வங்கி கணக்கில் உள்ள பணத்தைப் பயன்படுத்த உதவுகிறது. பெரும்பாலும்
தேசியமயமாக்கப்பட்ட வங்களில் சேமிப்பு
கணக்கு வைத்திருப்போருக்கு ரூபே RuPay ஏடிஎம்
கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மற்ற
ஏடிஎம் கார்டுகளைப் போன்று ரூபே Rupay ஏடிஎம் கார்டுகள் மூலமும் ஆன்லைன் பணபரிவர்த்தனை, POS–மூலம் பணபரிவர்த்தனை செய்யலாம்.
ரூபே RuPay ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துவோருக்கு சாதாரண சேவைகளை தவிர்த்து பல முக்கிய சேவைகள் அளிக்கப்படுகின்றன. அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால் அவசர தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக ரூ.5000/- வரை Overdraft சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையானது வருடாந்திர வட்டி 12% என்பதற்கு மிகாமல் வழங்கப்படும். இந்த சலுகை குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டும் வழங்கப்படும். இந்த சலுகையைப் பெற கடந்த ஆறு மாதங்களுக்கு வங்கி கணக்கை முறையாக பயன்படுத்தியிருக்க வேண்டும்.
இலவச காப்பீடு
| ரூபே கார்டு |
அதாவது ரூபே RuPay ஏடிஎம் கார்டு பயன்படுத்திவரும் நபர் எதிர்பாராத விதமாக விபத்தினால் மரனமடைந்தால் அவருடைய நாமினிக்கு அல்லது வாரிசுதாரருக்கு இழப்பீடாக ரூ.1,00,000/- வழங்கப்படும். அதேபோன்று RuPay ஏடிஎம் கார்டு பயன்படுத்திவரும் நபர் எக்காரணத்தேனும் மரனமடைந்தால் அவருடைய நாமினிக்கு அல்லது வாரிசுதாரருக்கு இழப்பீடாக ரூ.30,000/- வழங்கப்படும்.
28.08.2018 பிறகு வழங்கப்பட்ட ரூபே கார்டுகளுக்கு விபத்து காப்பீடு ரூ.2,000,00-மாக உயர்த்தப்பட்டுள்ளது.
சலுகைகளைப் பெற நிபந்தனைகள்
ரூபே
RuPay ஏடிஎம்
கார்டு பயன்படுத்திவரும் நபர்கள் மேற்கண்ட சலுகைகளைப் பெறவேண்டுமென்றால் 45
நாட்களுக்கு ஒரு முறையாவது ஏடிஎம் கார்டை பயன்படுத்த வேண்டும். அதாவது ஏடிஎம்மிலோ
அல்லது ஏடிஎம் எண்ணைப் பயன்படுத்தியோ ஆன்லைன் பரிவர்த்தனை அல்லது POS–ல் ஸ்வைப்பிங்/தேய்த்தோ பரிவர்த்தனை
செய்திருக்க வேண்டும்.
ஆக
தங்களிடம் உள்ள ரூபே RuPay ஏடிஎம் கார்டை முறையாக தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் Overdraft மாற்றும் இலவச காப்பீடு சலுகைகளைப் பெறலாம்.
குறிப்பு: பிரதம மந்திரி
ஜன் தன் யோஜனா வங்கி கணக்குகள் பெரும்பாலும் Rupay ஏடிஎம் கார்டுகளாக
உள்ளது. எனவே அத்தகைய வங்கி கணக்கு வைத்திருக்கும் தங்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்களிடம் இந்த தகவலை
பகிரவும்.
#ரூபே #RuPay #விபத்துகாப்பீடு #காப்பீடு
Wednesday, 8 December 2021
சட்டத்தின் ஆட்சி மூலம் பணியிடத்தின் கண்ணியம் காத்திட வேண்டுமா?
பணியிடத்தின் கண்ணியம் காத்திட பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு) 2013 சட்டத்தை செயல்படுத்துங்கள்
பொதுவாக சட்டத்தின் ஆட்சிக்குட்பட்டு நிறுவனங்களை நடத்துவதால் தேவையில்லாத பல பிரச்சனைகளை வருமுன் தடுக்கலாம். ஆனால் நமது நாட்டில் சட்டதிட்டங்கள் தெரியாமலும், தெரிந்தாலும் அதனுடைய முக்கியத்துவத்தை உணராமலும் பல்வேறு நிறுவனங்கள் சிறு, குறு முதல் பெரிய நிறுவனங்கள் வரை இயங்கி வருவது அனைவ்ரும் அறிந்ததே. அத்தகைய கண்டுகொள்ளப்படாத சட்டங்களில் ஒன்றுதான் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு) சட்டம், 2013. ஆங்கிலத்தில் The Sexual Harassment at Workplace (Prevention, Prohibition and Redressal) Act,2013 (POSH ACT) என்பார்கள்.
பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்
பணியிடங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்களில்
ஈடுபடுவோருக்கு தகுந்த தண்டனை வழங்கவும், எதிர்காலத்தில் பணியிடங்களில் பாலியல்
சீண்டல் சம்பவங்கள் ஏற்படாத வண்ணம் தடுக்கவும், அத்தகைய
செயல்களுக்கு தடைவிதிக்கவும் துரித நடவடிக்கை எடுக்க ஏதுவாக 10-க்கும்
மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் ஒவ்வொன்றிலும் உள்புகார் குழு (INTERNAL COMMITTEE) அமைக்கப்பட வேண்டும். அதேபோன்று பத்துக்கும் கீழே உள்ள
பணியாளர்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களிலிருந்து பெறப்படும் பாலியல் சீண்டல்கள்
குறித்த புகார்களை விசாரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் குழு LOCAL COMMITTEE அமைக்கப்பட வேண்டும். இக்குழுவை நியமிப்பது அரசின் கடமையாகும்.
ஆனால் இச்சட்டத்தின்படி மேற்கண்ட குழுக்கள் முறையாக
அமைக்கப்படாத காரணத்தால் பணியிடங்கள் பலவற்றில் பாலியல் சீண்டல்களால் பெண்கள்
(குழந்தைகள் உட்பட) பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். சமீப காலத்தில் பள்ளிகளில்
பயிலும் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி பாதிப்படைந்து வருகின்றனர்
என்ற செய்திகள் அதிகரித்துகொண்டே வருகின்றன.
இச்சட்டம் குறித்து ஒரு புறம் அறியாமையினாலும் மற்றொறு
புறம் இச்சட்டம் குறித்து தவறான புரிதல்களாலும் பல நிறுவனங்கள் உள்புகார்
குழுக்கள் இல்லாமல் இயங்கி வருகின்றன. இத்தகைய சூழலால் பணியாளர்களிடையே பாலியல்
சீண்டல் குறித்த விழிப்புணர்வு ஏற்பாடாமல், பெண்களுக்கு
எதிராக பாலியல் சீண்டல்கள் தொடர் கதையாகி வருகிறது.
உள்புகார் குழு குறித்த தவறான புரிதல்
தமிழகத்தில் பல ஆயிரம் நிறுவனங்கள் 10 க்கும்
மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆனால் அவைகள் அனைத்தும் சட்டப்பபடி
உள்புகார் குழுவை அமைதுள்ளனவா என்றால் நிச்சயமாக இல்லை என்று குறிப்பிடும்
அளவிற்குத்தான் தற்போதைய நிலை உள்ளது. காரணம் அத்தகைய குழுவை அமைத்தால் பெண்கள்
பொய்யான புகார்களை அளிப்பார்கள் என்ற அச்சமும், நிறுவனத்திற்கு வீண் செலவு என்றும் அபத்தமான
அச்சம் கொள்கின்றனர் நிறுவன உரிமையாளர்கள். ஆனால் அத்தகைய நிறுவனங்களை
நிர்வகிப்பவர்களுக்கு புரிவதில்லை உள்புகார் குழு அமைப்பதன் மூலம் தனது
நிறுவனத்தின் கண்ணியத்தையும் அங்கு பணிபுரிபவர்களின் கண்ணியத்தையும் காப்பாற்றலாம்
என்று.
சில நிறுவனங்கள் இக்குழுவை அமைப்பதனால் எந்த பயனும் இல்லை
என்று மெத்தனம் காட்டுகின்றன. ஆனால் அந்நிறுவனங்களை நிர்வகிப்பவர்களுக்கு புரிவதில்லை
பணியிடத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்கள் நடைபெறாத வண்ணம் தடுப்பதன்
மூலம் தேவையில்லாத அவப் பெயரை தடுக்க முடியும் என்று. ஒரு சிறந்த நிறுவனத்தின்
அடையாளம் என்பது தேவையில்லாத பிரச்சனைகளை வருமுன் தடுப்பதும், அத்தகைய
பிரச்சனைகள் வருமாயின் முறையான தீர்வு காண்பதும்தான். எனவே நிறுவனத்தின்
பெயருக்கும், பணியாளர்களின் கண்ணியத்திற்கும், பாதுகாப்பிற்கும் கலங்கம் விளைவிக்கக் கூடிய பாலியல் சீண்டல் சம்பவங்களை தடுக்கவும், தீர்வுகாணவும் உள் புகார் குழு இன்றியமையாததாகும்.
பாலியல் சீண்டல்கள் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பணியிடங்களில் POSH சட்டம் குறித்து பயிற்சி பட்டரை, விழிப்புணர்வு வகுப்புகள் போன்றவற்றின் மூலம் எத்தகைய செயல்களெல்லாம் பாலியல் சீண்டல்களாக கருதப்படும் என்றும், பாலியல் சீண்டல்களுக்கு ஆளானவர்கள் எந்த வகையில் யாரிடம் புகார் அளித்து பரிகாரம் பெற்றுக்கொள்ளலாம் போன்றவற்றை பணியாளர்களுக்கு கற்பிப்பது ஒவ்வொரு தனியார் மற்றும் அரசு நிறுவனத்தின் (பள்ளிகள், கல்லூரிகள் உட்பட அனைத்து நிறுவனங்களின்) கடமையாகும்.
அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் தடுத்தல், தடை மற்றும் குறைதீர்ப்பு சட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டால் பணியிடத்தின் கண்ணியமும், பணியாளர்களின் கண்ணியமும் பாதுகாக்கப்படும். தேவையில்லாத பிரச்சணைகள் தடுக்கப்பட்டு நிறுவனங்கள் தங்களது பணிகளில் தங்கு தடையின்றி கண்ணியத்தோடு செயல்படும்.
எனவே வாருங்கள் சட்டத்தின் ஆட்சி
மூலம் பணியிடங்களில் பெண்களின் கண்ணியத்தோடு நிறுவனத்தின் கண்ணியத்தையும் காத்திடலாம்!!!
#பணியிடம் #பாலியல்சீண்டல்கள் #துன்புறுத்தல்#உள்புகார்குழு
இது சம்மந்தமான மேலும் கட்டுரைகள்:
பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உள்ளூர் குழு மூலம் நீதி
மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்
தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...
-
குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காவல் நிலையமல்ல.. குடும்ப பிரச்சனை காவல்துறை என்பது குற்ற சம்பவங்களை பதிவுசெய்து உரிய விசாரணை மேற்கொண்டு உண்மைய...
-
ECS Debit cancellation Can an ECS debit mandate be cancelled or withdrawn prematurely? Yes. Electronic Clearing System Debit mandate or th...
-
தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...
