Search This Blog

Sunday, 11 February 2018

இலஞ்சம் கொடுக்காமல் பட்டா மாற்றுவது எப்படி? – பாகம்-2

புதிதாக பத்திரபதிவு மேற்கொள்ளப்பட்ட சொத்துகளுக்காக தனியாக பட்டா மாற்றம் விண்ணப்பம் அளிக்க வேண்டியதில்லை மற்றும் அப்படி மண்டல துணை வட்டாட்சியரோ (ZDT) அல்லது கிராம நிர்வாக அலுவலரோ (VAO) அவர்களிடம் தனியாக விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் முதல் பாகத்தில் குறிப்பிட்டிருந்தேன். இப்பாகத்தில் பத்திரபதிவு தவிர்த்து வேறு வகையில் நாம் பெற்ற சொத்துக்களை நமது பெயரில் சட்டப்படியான முறையில், எந்த அதிகாரிக்கும் இலஞ்சம் கொடுக்காமல் பட்டா மாற்றுவது எப்படி என்பதை பார்ப்போம். 

பத்திரபதிவு தவிர்த்து ஒருவருக்கு அசையா சொத்துக்கள் வேறு வழியிலும் வறுவதுண்டு. அதாவது தாத்தா, அப்பா அல்லது வேறு உறவினர்கள் யாரேனும் இறந்த பிறகு அவர்களுடைய வாரிசு என்ற வகையில் சில அசையா சொத்துக்களை பெற்றிருக்கலாம் .  அப்படி பெற்ற அசையா சொத்துக்களின் பட்டா இறந்தவர்களின் பெயரில் இருக்கும். எனவே இறந்தவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு வாரிசுதாரர்/சொத்தை அனுபவித்து வருபவர் பெயரை பட்டாவில் சேர்க்க தாலுக்கா அலுவலகத்திற்கு ஈ சேவை (ஆன்லைன்) மூலம் விண்ணப்பம் அளிக்க வேண்டும். அப்போது பத்திரத்தின் நகல், இறப்பு சான்றிதழ் & வாரிசு சான்றிதழ் ஆகியவை ஸ்கேன் செய்யப்பட்டிருப்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். பட்டா மாற்ற விண்ணப்பம் அளித்து 30 நாட்களுக்குள் , கிராம நிர்வாக அலுவலர் அவர்கள்  தள விசாரணை மேற்கொண்ட பிறகு மண்டல துணை வட்டாட்சியர்  அவர்களால்  தங்களுடைய பெயரில் பட்டா மாற்றப்படவேண்டும்.

ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் பெரும்பாலான அதிகாரிகள் நேரடியாக இலஞ்சம் கேட்கும் நடவடிக்கையில்தான் ஈடுபடுகின்றனர்.  ஒருவர் ஆன்லைன் மூலம் விண்ணபித்த உடனே கிராம உதவியாளர் மூலமும், ஒரு சில பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர் நேரடியாகவே இலஞ்சம் கேட்கின்றனர். இலஞ்சம் கொடுக்க மறுத்தால் பட்டா மாற்றவும் மறுக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையை சமாளிக்க முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டது போல அதிகாரி கேட்ட இலஞ்ச தொகை குறித்த உரையாடலை அப்படியே கடிதத்தில் எழுதி யார் இலஞ்சம் கேட்டாரோ அவருக்கே அனுப்பிவிடுங்கள். அப்படி செய்த பிறகும் ஒரு சில அதிகாரிகள் கல்நெஞ்சத்தோடு இருக்கவும் வாய்ப்புண்டு.  அப்படிபட்ட சூழ்நிலையில் நாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தலாம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தீர்வு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “குறித்துரைத்த காலகட்டத்திற்குள் மேலே குறிப்பிட்டுள்ள (புல எண்களை  குறிப்பிடவும்) புல எண்ணிற்குறிய பட்டாவில் மாற்றம் செய்யப்படாததற்கான காரணங்கள் அடங்கிய கோப்புகளை வழங்க வேண்டுகிறேன்” என்ற கோரிக்கைய ஒரு வெள்ளை தாளில் எழுதி, அதில் ரூ.10-ற்கான நீதிமன்ற வில்லையை ஒட்டி சம்மந்தபட்ட தாலுக்கா அலுவலக பொது தகவல் அலுவலருக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்பினாலே போதுமானதாகும். அக்கோரிக்கை கிடைத்து சில நாட்களிலேயே தங்களுடைய பாட்டா மாற்றம் நடைபெற வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ஏனென்றால் எந்த ஒரு அரசு அதிகாரியும் சட்ட விரோதமான காரணத்தை எழுத்து மூலமாக தர முன்வரமாட்டார்கள். எனவே தங்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பதில் தறுவதற்கு பதிலாக தங்களுடைய சட்டப்படியான பட்டா மாற்ற விண்ணப்பத்தை பரிசிலித்து பாட்டா மாற்றத்தை மேற்கொள்வார்கள்.


#பட்டா #இலஞ்சம் #பட்டாமாற்றம் #VAO #மண்டலதுணைவட்டாட்சியர் #ZDT


3 comments:

  1. Two days before I lodged a petition regarding this on CM Cell, Tamil Nadu. Since last evening, Tashidar, VAO are repeatedly making a phone call to me. I registered a land deed document on 2nd May,2018. I mentioned the following: Writ Petition (MD) No.8250 of 2008 and M.P (MD) No. 1 of 2008], held that once the Sub-Registrar is entrusted to collect fee for patta transfer during the registration of the property as per G.O.Ms. No.916 CT & RE Department, dated 23.08.1984. And letter number 8317/C1/14 dated 20-JUNE-2014 from the office of the Inspector General of Registration,Santhome High Road,Chennai to all the District and Sub-registrars of Tamil Nadu.

    ReplyDelete
    Replies
    1. Great Mr.Anbazhagan. Do convey this information to your colleagues and neighbors. I am trying to create awareness about this by writing blogs whenever i get time. On this topic I have already tried to explain about the fact that fee for patta is collected by Sub-Registrar in my part-I blog :- http://fight4ruleoflaw.blogspot.in/2018/02/1.html

      Delete

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...