Search This Blog

Friday, 9 March 2018

விவசாயம் என்பது தொழில் அல்ல வாழ்க்கை முறை

இயற்கை விவசாயி
விவசாயம் என்பது ஒரு தொழில் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது தொழில் அல்ல. மனித இனத்தின் வாழ்க்கை முறையாகும். வட இந்தியாவில் கோதுமை அதிகம் பயிர் செய்கின்றனர். ஆனால் தென் இந்தியாவில் நெல் அதிகம் பயிர் செய்கின்றனர். இதுவே மலை பிரதேசங்களில் ஆப்பில் போன்ற பழவகைகள் பயிர் செய்யப்படுகின்றன. காரணம் அவ்விடம் அமைந்துள்ள தட்பவெட்ப நிலை மற்றும் புவி அமைப்பு ஆகியவற்றிற்கு ஏற்றார்போல் அங்கு வாழ்பவர்கள் தங்களது உணவு தேவையை ஏற்படுத்திகொள்கின்றனர். அதற்கான பயிர் செய்யும் முறையும் வெவ்வேறு இடத்திற்கேற்ப மாறுபடுகின்றன. அவைகளை பயிர் செய்ய அவர்கள் மேற்கொள்ளும் முயர்ச்சிகளே (உடல் உழைப்பு) அவர்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கும். ஆக ஒரு விவசாயி முறையாக சூழலுக்கு ஏற்ப விவசாயம் செய்வானாயின் அவன் ஆரோக்கியமாக வாழ்வான். அதாவது இயற்கை முறையில் பயிரிட்டு அனைத்து உயிர்களையும் அறவனைப்பானாயின் அத்தகைய விவசாயி நோயுர வாய்ப்பே இருக்காது. அவன் வாழ்நாள் முழுவதும் மருத்துவரை நாட தேவையே இல்லை.

அது எப்படி சாத்தியம் என்று நினைக்கிரீர்களா? 100% சதவீதம் சாத்தியம். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயி இரசாயன உரம் & பூச்சிகொள்ளிகளை பயன்படுத்தமாட்டான் . ஆகையால் அவன் உற்பத்தி செய்த பொருட்களில் இமியளவும் நஞ்சு இருக்காது. எனவே நஞ்சில்லா உணவை உண்டு அவன் ஆரோக்கியமாக இருப்பான். இன்னொரு விசயம்.. அவன் ஆரோக்கியமாக இருக்க தனியாக யோகா செய்ய வேண்டியதில்லை... உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் அவை அனைத்தும் அவனுடைய வாழ்க்கை முறையில் அடங்கிவிட்டது. அதாவது அவன் விவசாயம் செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கைகளே ஒரு உடற்பயிற்சியாகும். நகர வாழ் மக்கள் போல உடற்பயிற்ச்சி என்ற பெயரில் அவனுக்கு நேரத்தை வீணடிக்கும் தேவை வராது.

எனவே உண்மையான இயற்கை விவசாயியால் மட்டுமே முறையான வாழ்க்கை வாழ முடியும். அவர்கள் வாழும் வாழ்க்கை மட்டுமே நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை தற்போது பிரதிபளிக்கிறது. எனவே அத்தகைய வாழ்க்கை முறை மூலம் உற்பத்தியாகும் பொருட்களை பயன்படுத்துபவர்களும் ஆரோக்கியமாக வாழும் வாய்ப்பை பெறுவார்கள். ஆனால் அத்தகைய விவசாயிகளுக்கு தேவையான அங்கிகாரம் கிடைப்பதில்லை என்பதை நினைத்தால்தான் வருத்தமளிக்கிறது.

#விவசாயம் #இயற்கைவிவசாயி #விவசாயி

2 comments:

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...