Search This Blog

Sunday, 7 October 2018

காவல் துறை மக்களின் நண்பனா? இலஞ்சம் கொடுக்கும் சிலரின் நண்பனா?

காவல் துறை மக்களின் நன்பன் என்பது கூற்று. ஆனால் தற்போதைய சூழலில் இக்கூற்று உண்மை என்று எவராலும் சொல்ல முடியுமா

எப்படி முடியும்?  நண்பனாகக் கூட இருக்க தேவையில்லை . கிடைக்கிற சம்மபளத்திற்கு உண்மையாக வேலை செய்தாலே போதும் என்றுதான் ஒவ்வொறு பாரம தமிழனும் என்னுகிறான். அந்த அளவுக்குத்தான் காவல்துறையின் செயல்பாடு உள்ளது நம் தமிழ்நாட்டில். 

ஏனென்றால் ஒரு பாமரன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தால் அதற்கு உடனடியாக ரசிது (சிஎஸ்ஆர்)  கொடுக்கக் கூட தயங்குகின்றனர் காவல் துறையினர். இதற்கே இப்படியென்றால் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்வார்களா என்ன ? ம்ம்..ம்ம்... அதற்கு மிகப் பெறிய போராட்டம் அல்லவா நடத்தவேண்டியிருக்கிறது. காவல் துறை காணிப்பளரிடம் புகார் கொடுக்க வேண்டியிருக்கிறது. உயர்நீதின்றத்தை நாடவேண்டியிருக்கிறது. அதன் பிறகே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது.

 ஆனால் விபத்து குறித்த முதல் தகவல் அறிக்கை மட்டும் உடனடியாக பதிவு செய்யப்படுகிறது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.  ஆனால் அதற்கும் கூட வேறு சில எதிர்பார்ப்புகளுடன்தான் பதிவுசெய்கிறார்கள் என்பதை அறிந்து ஏமாற்றம்தான் அடைந்தேன்.

ஒரு குற்றம் குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய சுலபமான வழி ஏதாவது உண்டு என்றால் உண்டு. ஆனால் அதற்கு காவல் துறை அதிகாரிக்கு அரசு கொடுக்கும் சம்பளத்திற்கும் மேலாக கிம்பளம் (இலஞ்சம்) தர வேண்டும்.   அதைத் தந்தால் முதல் தகவல் அறிக்கை மட்டுமல்ல ஒரு நிரபராதியைக் கூட கைதும் செய்து விடுவர் நமது காவல் துறையினர்.
இப்படியிருக்கும் சில காவல் அதிகாரிகளால் காவல் துறை மக்களின் நண்பனா  அல்லது இலஞ்சம் கொடுக்கும் சிலரின் நண்பனா என்றுதான் என்ன தோன்றுகிறது. 

நிம்மதி கிடைக்குமா?
இப்படிபட்ட புழைப்பு செய்யும் காவல் அதிகாரிகளின் வாழ்வில் நிம்மதி இருக்குமா?. ஒரு நிரபராதியினை பணத்திற்காக கைது செய்யும் அதிகாரிகளும், பணம் பெற்றுக்கொண்டு பொய் வழக்கு பதிவு செய்யும் அதிகாரிகளும், இலஞ்சம் கொடுக்க்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக முறையாக கொடுக்கப்படும் புகாரினை பதிவு செய்ய மறுக்கும் அதிகாரிகளும் அவர்களுடைய புனிதமான தொழிளிக்கு துரோகம் செய்வதோடு நில்லாமல் நாட்டிற்கும் கலங்கம் விளைவிக்கின்றனர். எனவே அவர்கள் கோடி கோடியாய் பணத்தை சம்பாதித்தாலும் நிம்மதியை சம்பாதிக்க முடியாது.  அத்தகைய நபருக்கு இறைவன் நிம்மதியை தரமாட்டான். 

வாய்மையே வெல்லும் என்ற லோகோவை வைத்திருக்கும் தமிழக காவல்துறை வாய்மை வெல்லும் வகையில் நடந்துகொள்ளும் காலம் வருமா?   

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...