Search This Blog

Saturday, 2 February 2019

கிராம மக்களின் அடிப்படை உரிமைகளை அவமதிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள்

கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவியே பாமர கிராம மக்களுக்கு உதவியாக இருப்பதற்காகவும், கிராமத்தில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாத்து அரசுக்கு வரக்கூடிய வருவாயை உறுதிசெய்யும் நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கிராம நிர்வாக அலுவலர்கள் அவ்வேலைகளை சரிவர செய்வதில்லை. மாறாக அதற்கு முரன்பாடான செயல்களையே செய்து வருகின்றனர். அதுவும் எந்த மக்களின் நலனுக்காக அந்த பதவி ஏற்படுத்தப்பட்டதோ அம்மக்களை மிரட்டியும், அவர்களின் அடிப்படை உரிமைகளை அவமதித்தும், அலைக்கழித்தும் வருகின்றனர் கிராம நிர்வாக அலுவலர்கள்.

அடிப்படை உரிமைகள் பரிப்பு
இந்திய அரசியல் சாசனம் நம் அனைவருக்கும் அடிப்படை உரிமைகள் வழங்கியுள்ளது. அதில் சம உரிமை, சுதந்திரமாக வாழும் உரிமை ,சாதி மத பேதமின்றி வாழும் உரிமை, தொழில் செய்ய உரிமை, சமய சார்பு உரிமை , கலச்சாரம் மற்றும் கல்வி கற்கும் உரிமை ஆகியவை இன்றியமையாத ஒன்றாகும். ஆனால் அத்தகைய இன்றியமையாத உரிமைகளை கிராம நிர்வாக அலுவலர்கள் சிலர் தனது சர்வாதிகார செயலால் கிராமத்தில் வாழும் பாமர மக்களுக்கு கிடைக்காத வண்ணம் செயல்படுகின்றனர்.

கிராம மக்கள் தாங்கள் பல ஆண்டுகளாக வாழும் இடத்திற்கும், விவசாயம் செய்து வரும்  இடத்திற்கு பட்டா கேட்டு விண்ணப்பித்தால் அதற்கு தேவையில்லாத அதாவது சட்டத்திற்கு புரம்பான காரணங்களை குறிப்பிட்டு பட்டா கொடுக்க முடியாது. மீறி பட்டா வேண்டுமென்றால் பணம் செலவாகும் என்று மிரட்டி இலஞ்சம் கொடுத்தால் பட்டா மாற்றுவது இல்லையென்றால் அவர்களை காலம் காலமாக அலைக்கழிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இத்தகைய கிராம் நிர்வாக அலுவலர்களின் செயலானது சுதந்திரமாக வாழும் உரிமைக்கும், தொழில்புரியும் உரிமைக்கும் எதிரான செயலாகும்.

இயற்கையை பாதுகாக்க தவறுதல்
அதுமட்டுமல்லாமல் கிராம நிர்வாக அலுவலர்கள் அவர்கள் பணிபுரியும் கிராமங்களை சரிவர கண்காணிக்காமலும், சட்டவிரோத சக்திகளிடம் அதாவது சட்டவிரோதமாக இயற்கை வளங்களை சூரையாடும் நபர்களிடம்  பல ஆயிரம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு அவர்களை கண்டிக்கத் தவறுவதால்  தற்போது கிராமங்க்ளின் இயற்கை வளங்களான மலைகள் , காடுகள்  மற்றும் அங்கு இருக்கும் அரிய வகை தாவரங்களும் உயிரினங்களும் வேகமாக அழிந்து வருகின்றனர்.  இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு நில்லாமல் விவசாயத்தையே நம்பி இருக்கும் கிராம மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட்டுள்ளது.  நிளத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. மழை முன்போல் பெய்வதில்லை. ஆக இவ்வளவுக்கும் காரணம் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் கடமைகளை செய்ய தவறி இலஞ்சம் பெறும் பழக்கம்தான்.

இவ்வளவு பாவ மற்றும் துரோக செயல்களை செய்தபிறகும் பாமர மக்களிடம் எதற்கெடுத்தாலும் இலஞ்சம் கேட்டு ஏற்கெனவே இன்னல்படும் பாமர மக்களின் வாழ்க்கையை மேலும் சிரமத்தை உண்டாக்கி அவர்களின் அடிப்படை உரிமைகளை அவமதித்து  இரக்கமில்லாமல் மிரட்டி பணம் பரிக்கும் கூடாரமாக ஆகிவிட்டார்கள் சிலர் கிராம நிர்வாக அலுவலர்கள்.

குறிப்பு: மேலே குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஒன்றை மற்றும் புரிந்துகொள்ள வேண்டும். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்”. எனவே அதற்குள் அவர்கள் சட்டவிரோதமான போக்கை கைவிட்டு பாமர மக்களின் நண்பனாக மாறி தனது சட்டப்படியான கடமைகளை சரிவரசெய்யுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

ஆசிரியர் குறிப்பு: சி.பிரபு, வழக்கறிஞர். இவர் கிராம நிர்வாக அலுவலர்களால்  பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார். 

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...