அரசு கடந்த ஒரு மாத காலமாக கொரோனா கொள்ளை நோய் பரவுவதை தடுக்க நாடு முழுவதும்
ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசிய
சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், கடைகள் தவிற மற்ற
அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும், தொழிற்சாலைகளும், அரசு அலுவலகங்களும்
மூடப்பட்டுள்ளன. அரசு அலுவகங்களில் குறிப்பாக
மருத்துவத்துறை, காவல் துறை, தூய்மை பணித்துறை, வருவாய்துறை போன்ற முக்கியாமான
துறைகள் சமூக இடைவேலையைப் பிண்பற்றி தங்களது அன்றாட கடமைகளை செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இதர துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் சிலர் தங்களது
அலுவலகம் மூடி கிடக்கிறது என்பதனால் தனக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளது என்ற தவறான
புரிதலைக் கொண்டுள்ளனர்.
சமூக பரவலை தடுப்பதற்காகவே அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன
COVID19 என்கிற கொரோனா
கொள்ளை நோய் பரவுதலைத் தடுப்பதற்காக மட்டுமே அரசு மக்களின் நலன் கருதி ஊரடங்கு உத்தரவு
பிரப்பித்து பெரும்பாலான அரசு அலுவலகங்களை மூடியும், சில அலுவலகங்களில் குறைந்த
ஊழியர்களைக் கொண்டு செயல்பட்டுவருகிறது. ஆக அரசு அலுவலர்கள்
குடும்பத்துடன் குதுகலமாக இருப்பதற்காக விடுமுறை அளிக்கவில்லை. மாறாக அலுவலகம் வருவதற்கு
விளக்கு அளித்துள்ளது.,
அவர்களின் குடும்ப நபர்கள் உட்பட அனைத்து மக்களின் உயிரையும் காப்பாற்றுவதற்காக
அவர்களை வீட்டிலேயே இருக்குமாறு அரசு அறிவுறித்தியுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால்
அலுவலகம் செல்லாமல் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலையில் உள்ள அரசு அலுவலர்கள் தங்களது
வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய பணிகளை செய்வதாகும். எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களால் பொதுமக்களிடம் பெறப்படும் இணைய வழி மனுக்களை சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பும்
பணிகளையும், அம்மனுக்களில் குறைந்தபட்சம் மிகவும் முக்கியமானவற்றின்
மீதாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இணையம் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்புகொண்டு
மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகளை
மேற்கொள்ளலாம்.
முடங்கியிறுக்கும் இணையவழி சேவை
கடந்த ஒரு மாத காலமாக இணையம் மூலம் அந்தந்த மாட்ட ஆட்சியருக்கு பொதுமக்களால் அளிக்கப்பட்டு வரும் மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. https://gdp.tn.gov.in/ என்ற இணையம் மூலம் பெறப்பட்ட மனுக்களை குறைந்த பட்சம் சம்மந்தப்பட்ட துறைக்கு அனுப்பவதும் கூட தடைபட்டுள்ளது. பொதுமக்கள் ஊரடங்கால் நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தங்கள் மனுக்களை அளிக்க முடியாத சூழலில் இணையம் மூலம் மனுக்களை அளித்து வருகிறார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து இதுநாள் வரை இணைய வழி மனுக்கள் பரிசிலனை செய்யப்படவில்லை. காரணம் என்ன என்று கேட்டால் கொரோனா ஊரடங்கால் அலுவலகம் செல்லமுடியாத சூழல் என்பார்கள். ஆனால் உண்மையில் அம்மனுக்கள் குறித்த பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வீட்டில் இருந்தபடியே கணினி அல்லது கைபேசி மூலமாகவே செய்யலாம்.
ஒவ்வொரு அரசு அலுவலருக்கும்
அரசு முழுமையான சம்பளத்தையும் கொடுத்து அவர்களின் பாதுகாப்பையும் அவர்களின் குடுப்பத்தின்
பாதுகாப்பையும் உறுதிசெய்யும்போது அரசு ஊழியர்கள் ஏன் மக்களின் பாதுகாப்புக்காக வீட்டிலிருந்தபடியே அவர்களால்
இயன்ற பணிகளை செய்யக் கூடாது என்பதை அவர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாடு தற்போது கொரோன என்ற கொடிய நோயால் மிகப் பெரிய அச்சுறுத்தலை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அரசு ஊழியர்களும், உயர்
அதிகாரிகளும் வீட்டிலேயே இருக்கும் சூழல் நிலவினாலும், அதனை விடுமுறையாக
கருதாமல் தங்கள் பணிகளை அங்கிருந்தபடியே திறம்பட செய்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box