விவசாயத்தை அழித்து கல் குவாரி அமைப்பவன் மனிதனா?
இயற்கை வழி விவசாயம் செய்பவன் மனிதனா?
ஏழையின் வயிற்றை அடித்து பிழைப்பவன் மனிதனா?
ஏழையின் உரிமைக்காக குரல் கொடுப்பவன் மனிதனா?
ஏரியின் மண்ணை திருடி பல கோடி சம்பாதிப்பவன் மனிதனா?
அவனை சட்டத்தின் முன் அடையாளம் காட்டுபவன் மனிதனா?
சில கோடி ரூபாய்க்கு இயற்கையை அழிப்பவன் மனிதனா?
அதனை போராடி தடுப்பவன் மனிதனா?
தான் சம்பாதிக்க பல்லுயிர்களை அழிப்பவன் மனிதனா?
இயற்கை விவசாயம் செய்து பல்லுயிர்களை
பாதுகாப்பவன் மனிதனா?
அழிப்பவன் மனிதனா? ஆக்குபவன்
மனிதனா?
சட்டத்தை மிதிப்பவன் மனிதனா? மதிப்பவன் மனிதனா?
குறிப்பு: சி.பிரபு, கிராமங்களின் சுற்றுப்புறத்திற்கு
தீங்கு விளைவிக்கும் கயவர்களுக்கு எதிராகவும் அவர்களுக்கு துணைபோகும்
துரோகிகளுக்கு எதிராகவும் வழக்காடும் வழக்கறிஞர்.
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box