Search This Blog

Saturday, 16 October 2021

திருப்பெயர் ஊராட்சி தேர்தல் 2021: பணநாயகம் வென்றது...

 

தேர்தல் Image/Credit:iStockphoto
ஆனாலும் ஜனநாயகம் வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது

ஆரம்பத்தில் ஜனநாயக முறையில் தேர்தலை சந்தித்த எனது அண்ணன் திரு.அருள் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் தேர்தல் நெறுங்க நெறுங்க திருப்பெயர் ஊராட்சி பாமர மக்களின் உள்ளங்களை பொய், பித்தலாட்டம், ஓசி உணவு, ஓசி மது, வாக்குக்கு பணம், அச்சுறுத்தல் போன்றவற்றின் மூலம் சலவை செய்து பணநாயகத்தை அரங்கேற்றிய நபர் வெற்றிபெற்றுள்ளார்.

சட்டவிரோதமான செயல்கள் மூலம் தலைவர் என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கலாம்.  ஆனால் வெற்றி பெற்ற அந்த நபரின் மனசாட்சிக்கே  தெரியும் அவர் அந்த பதவிக்கு அருகதை இல்லாதவர் என்று. அவர் சட்டத்திற்கு புரம்பான வழிகளை கையாண்டு இருந்தும் மக்கள் அவருக்கு அதிகப்படியான வாக்குகள் அளித்து தலைவராக்கியுள்ளனர். அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு மக்கள் சேவைகளை செய்ய முடியாது என்று கூறிவிட்டு விலகிக்கொள்ள இயலாது. ஏனென்றால் சட்டம் சொல்லவில்லை “வாக்குக்கு பணம் கொடு என்று”... சட்டம் சொல்லவில்லை “ஓசி மது, ஓசி உணவு, ஓசி புடவை கொடு என்று”.... ஆனால் சட்டம் சொல்கிறது “தலைவர் என்பவர் மக்கள் சேவை செய்ய மட்டுமே என்று”.

எனவே பணநாயகம் வென்றிருந்தாலும் பல இலட்சங்கள் செலவழித்து பதவிக்கு வந்தவர் மக்கள் சேவைகளை இலஞ்சமின்றியே செய்தாக வேண்டும். வேறு வழியில்லை ராஜா!!! தலைவர் பதவியை காசு கொடுத்து வாங்கியபின் அந்த பொறுப்பிலிருந்து சாதாரணமாக விலகிவிடலாம் என்ற பகல் கனவு காண வேண்டாம் ராஜா😃😃😃!!!   

ஜனநாயகம் இன்று தோல்வியடைந்ததுபோல் தெரியலாம் ஆனால் ஒருநாள் வெல்லும்... மக்கள் அனைவரும் உனது பண திருமிருக்கு அடிமை ஆகவில்லை. 96 நபர்கள் ஒத்த ரூபாய் கூட பெறாமல் ஜனநாயக முறையில் எனது அண்ணன் அருள் அவர்களுக்கு வாக்களித்துள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவும். இப்போது நீ அதிகப்படியான அப்பாவி மக்களை ஏமாற்றியிருக்கலாம். ஆனால் இந்த நிலை தொடர்ந்துகொண்டே இருக்காது ராஜா! மக்கள் விழிப்படைவார்கள்.. ஜனநாயகம் ஒரு நாள் அமோக வெற்றிபெரும்.  

அரசியல் என்பது ஏமாற்று கிடையாது ராஜா! அரசியல் என்பது அனைத்து உயிர்களுக்கு நன்மை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு!!! இந்த உண்மையை ஒரு நாள் உன்னை உணர வைப்போம் தலைவரே... இன்று இல்லையேல் நாளை ! 

Monday, 11 October 2021

திருப்பெயர் ஊராட்சி தேர்தல் 2021: வெல்லப்போவது ஜனநாயகமா? பணநாயகமா?

 தேர்தல் image/Credit:iStockphoto

இம்முறை திருப்பெயர் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 06.10.2021 அன்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களது ஊராட்சியில் பல வினோதமான நிகழ்வுகள் அரங்கேறின.

ஒருபுறம் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்போவதில்லை என்ற மன உறுதியோடு செயல்பட்ட தலைவர் வேட்பாளர் எனது அண்ணன் அருள் அவர்களும் மறுபுறம் இரண்டு பண பலம் படைத்த வேட்பாளர்கள்  வேட்பு மனு தாக்கல் செய்த நாள் முதலே இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் மது கொடுத்தும், பிரியாணி கொடுத்தும், பொய், பித்தலாட்டம் மற்றும் மிரட்டல் போன்ற சட்டவிரோத யுக்திகளை கையாண்டும், மேலும் தோல்வி பயத்தில் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பும் ஓட்டு ஒன்றிற்கு ரூ.1000 முதல் ரூ.2000 பணம், புடவைகள் கொடுத்தும் இத்தேர்தலை சந்தித்தனர்.

பணத்தையும்,சாராயத்தையும், பிரியாணியையும், புடவையையும் அள்ளி வீசிய வேட்பாளர்களுக்கு மத்தியில் எனது அண்ணன் அருள் அவர்களுக்கு நானும் எங்களது குடும்பமும் ஜனநாயக முறையில் மக்களை சந்தித்து  தனி மனிதனாக எனது அண்ணன் செய்த சேவைகள் மற்றும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் என்னென்ன செய்ய இருக்கிறார் என்பதை தேர்தல் அறிக்கையாக தயாரித்தும் மக்களை விழிப்படைய செய்தும் கடந்த சுமார் 20 நாட்களாக வாக்குகள் சேகரித்தோம்.

தேர்தல் நாளன்றும் எங்களது குடும்ப நபர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தோம்.  பணபலம் படைத்த மற்ற இரு வேட்பாளர்களோ இளைஞர்களுக்கு மதுபோதையேற்றி வன்முறையை தூண்டிவிட்டு அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடும் யுக்தியை கையாண்டனர். ஆனால் காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டால் வன்முறை நடக்காமல் தடுக்கப்பட்டது.

நாங்களோ எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் எங்களது கடமைகளை அமைதியான வகையில் சிறப்பாக செய்து முடித்தோம். வரும் 12.10.2021 அன்று திருப்பெயர் ஊராட்சி மக்களின் தீர்ப்பு வர உள்ளது. அவர்களின் தீர்ப்புதான் சொல்ல வேண்டும் வெல்லப்போவது யார் என்று.  ஜனநாயகமா? இல்லை பணநாயகமா?

 #திருப்பெயர்  #ஜனநாயகம்

இது சம்மந்தமான மேலும் கட்டுரைகள்:-

இனியேனும் ஜனநாயகத்திற்கு துரோகம் செய்வதை தவிருங்கள்

திருப்பெயர் ஊராட்சி தேர்தல் 2021: பணநாயகம் வென்றது..

மரம் வெட்டுவது பல உயிரினங்களின் வீடுகளை அழிப்பதற்கு சமம்

தற்போது வெப்ப அலையால் தத்தளிக்கும் நிலையையும் மரங்களின் மகத்துவம் உணராது சில மனிதர்கள் அற்ப ஆசைக்காக மரங்களை வெட்டுக்கிறார்கள். ஒரு சிலர் அர...