தேர்தல் image/Credit:iStockphoto
இம்முறை திருப்பெயர் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 06.10.2021 அன்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் எங்களது ஊராட்சியில் பல வினோதமான நிகழ்வுகள் அரங்கேறின.
ஒருபுறம் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்போவதில்லை என்ற மன உறுதியோடு செயல்பட்ட தலைவர் வேட்பாளர் எனது அண்ணன் அருள் அவர்களும் மறுபுறம் இரண்டு பண பலம் படைத்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நாள் முதலே இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் மது கொடுத்தும், பிரியாணி கொடுத்தும், பொய், பித்தலாட்டம் மற்றும் மிரட்டல் போன்ற சட்டவிரோத யுக்திகளை கையாண்டும், மேலும் தோல்வி பயத்தில் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பும் ஓட்டு ஒன்றிற்கு ரூ.1000 முதல் ரூ.2000 பணம், புடவைகள் கொடுத்தும் இத்தேர்தலை சந்தித்தனர்.
பணத்தையும்,சாராயத்தையும், பிரியாணியையும், புடவையையும் அள்ளி வீசிய வேட்பாளர்களுக்கு மத்தியில் எனது அண்ணன் அருள் அவர்களுக்கு நானும் எங்களது குடும்பமும் ஜனநாயக முறையில் மக்களை சந்தித்து தனி மனிதனாக எனது அண்ணன் செய்த சேவைகள் மற்றும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் என்னென்ன செய்ய இருக்கிறார் என்பதை தேர்தல் அறிக்கையாக தயாரித்தும் மக்களை விழிப்படைய செய்தும் கடந்த சுமார் 20 நாட்களாக வாக்குகள் சேகரித்தோம்.
தேர்தல் நாளன்றும் எங்களது குடும்ப நபர்கள் அனைவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தோம். பணபலம் படைத்த மற்ற இரு வேட்பாளர்களோ இளைஞர்களுக்கு மதுபோதையேற்றி வன்முறையை தூண்டிவிட்டு அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேடும் யுக்தியை கையாண்டனர். ஆனால் காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டால் வன்முறை நடக்காமல் தடுக்கப்பட்டது.
நாங்களோ எங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் எங்களது கடமைகளை அமைதியான வகையில் சிறப்பாக செய்து முடித்தோம். வரும் 12.10.2021 அன்று திருப்பெயர் ஊராட்சி மக்களின் தீர்ப்பு வர உள்ளது. அவர்களின் தீர்ப்புதான் சொல்ல வேண்டும் வெல்லப்போவது யார் என்று. ஜனநாயகமா? இல்லை பணநாயகமா?
#திருப்பெயர் #ஜனநாயகம்
இது சம்மந்தமான மேலும் கட்டுரைகள்:-
இனியேனும் ஜனநாயகத்திற்கு துரோகம் செய்வதை தவிருங்கள்
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box